பேடிஎம் வெறும் டிரைலர் தான்.. அடுத்தடுத்து சிக்கப்போகும் பேமெண்ட் வங்கிகள்.. சாட்டையைச் சுழற்றும் RBI
இந்தியாவின் மிகப்பெரிய நிதி பரிமாற்ற தளமான பேடிஎம் நிறுவனத்தின் கிளை பிரிவாகப் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி விதிமுறைகளை மீறி பரிமாற்றத்தை பிராசஸ் செய்தது முதல் அளவுக்கு அதிகமான தொகையைப் பிராசஸ் செய்தது வரையில் பல குற்றச்சாட்டுகள் மீது ஆர்பிஐ அதன் செயல்பாடுகளுக்குப் பிப்ரவரி 29 ஆம் தேதி முதல் தடைவிதித்துள்ளது.இந்த நிலையில் அமலாக்கத்துறை பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி தனது விசாரணைக்கான பணிகளைச் செய்து வருகிறது.
இது ஒருபக்கம் இருக்க மறுமுனையில் நிதியமைச்சக பிரிவான FIU போடிஎம் வெறும் டிரைலர் தான், அடுத்தடுத்து சிக்கப்போகும் பேமெண்ட் வங்கிகளைப் பாருங்கள் எனப் புதிய குண்டை தூக்கிப்போட்டு உள்ளது. KYC வெரிஃபிகேஷன் இல்லாமல் சுமார் 50,000 கணக்குகள் செயல்பாட்டில் உள்ளதாக நிதி நுண்ணறிவு பிரிவு (FIU) கண்டறிந்துள்ளது. இது மட்டும் அல்லாமல் இந்தக் கணக்குகளில் சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் மற்றும் பணமோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது என்றும் தெரிய வந்துள்ளது.
இதன் மூலம் ஆர்பிஐ வலையில் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி சிக்கியதை போல் அதிகப்படியான பேமெண்ட்ஸ் வங்கிகள் ஒழுங்குமுறை நடவடிக்கையை எதிர்கொள்ளலாம் என்று கணிக்கப்படுகிறது.இந்த 50000 கணக்கில் சுமார் 30,000 கணக்குகள் பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கியைத் தவிர வேறு பேமெண்ட் வங்கிகளில் உள்ளது தான் தற்போது கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயம். நிதி நுண்ணறிவு பிரிவு (FIU) இதுகுறித்த விவரங்கள் ஏற்கனவே இந்திய ரிசர்வ் வங்கிக்கு (ஆர்பிஐ) கொடுக்கப்பட்டுள்ளன.