பேடிஎம் வெறும் டிரைலர் தான்.. அடுத்தடுத்து சிக்கப்போகும் பேமெண்ட் வங்கிகள்.. சாட்டையைச் சுழற்றும் RBI

இந்தியாவின் மிகப்பெரிய நிதி பரிமாற்ற தளமான பேடிஎம் நிறுவனத்தின் கிளை பிரிவாகப் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி விதிமுறைகளை மீறி பரிமாற்றத்தை பிராசஸ் செய்தது முதல் அளவுக்கு அதிகமான தொகையைப் பிராசஸ் செய்தது வரையில் பல குற்றச்சாட்டுகள் மீது ஆர்பிஐ அதன் செயல்பாடுகளுக்குப் பிப்ரவரி 29 ஆம் தேதி முதல் தடைவிதித்துள்ளது.

இந்த நிலையில் அமலாக்கத்துறை பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி தனது விசாரணைக்கான பணிகளைச் செய்து வருகிறது. இது ஒருபக்கம் இருக்க மறுமுனையில் நிதியமைச்சக பிரிவான FIU போடிஎம் வெறும் டிரைலர் தான், அடுத்தடுத்து சிக்கப்போகும் பேமெண்ட் வங்கிகளைப் பாருங்கள் எனப் புதிய குண்டை தூக்கிப்போட்டு உள்ளது.

KYC வெரிஃபிகேஷன் இல்லாமல் சுமார் 50,000 கணக்குகள் செயல்பாட்டில் உள்ளதாக நிதி நுண்ணறிவு பிரிவு (FIU) கண்டறிந்துள்ளது. இது மட்டும் அல்லாமல் இந்தக் கணக்குகளில் சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் மற்றும் பணமோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது என்றும் தெரிய வந்துள்ளது.

இதன் மூலம் ஆர்பிஐ வலையில் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி சிக்கியதை போல் அதிகப்படியான பேமெண்ட்ஸ் வங்கிகள் ஒழுங்குமுறை நடவடிக்கையை எதிர்கொள்ளலாம் என்று கணிக்கப்படுகிறது.

இந்த 50000 கணக்கில் சுமார் 30,000 கணக்குகள் பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கியைத் தவிர வேறு பேமெண்ட் வங்கிகளில் உள்ளது தான் தற்போது கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயம். நிதி நுண்ணறிவு பிரிவு (FIU) இதுகுறித்த விவரங்கள் ஏற்கனவே இந்திய ரிசர்வ் வங்கிக்கு (ஆர்பிஐ) கொடுக்கப்பட்டுள்ளன.

ஆர்பிஐ இந்தத் தகவல் ஆய்வு செய்து, பரிசீலித்துக் கூடுதல் தகவல்களைக் கேட்டுள்ளது எனத் தெரிகிறது. இந்த விஷயம் உறுதி செய்யப்படுமாயின் ஆர்பிஐ பிடியில் இன்னும் பல பேமெண்ட்ஸ் வங்கிகள் கடுமையான ஒழுங்குமுறை நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் எனத் தெரிகிறது.

சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகளைப் புகாரளிக்காதது, வேலெட் கணக்கின் உண்மையான பயனாளி விவரங்களைப் பராமரிக்காதது மற்றும் ஒரே வருமான வரி PAN எண்ணைப் பயன்படுத்திப் பல பயனர்களைப் பதிவு செய்தல் ஆகியவை இந்த 50000 கணக்குகள் விதிமீறியுள்ளது.

ஆர்பிஐ கேட்டுள்ள கூடுதல் தகவல்கள் உடன் மார்ச் 31க்கு முன், பேமெண்ட் வங்கிகளைப் பாதிக்கும் குறைபாடுகள் குறித்த விரிவான அறிக்கையை FIU அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FIU அமைப்பு கொடுத்த மொத்த அறிக்கையில் சுமார் 175,000 கணக்குகள் விதிமுறைகளுக்கு இணங்காதவையாக இருந்தன, அவற்றில் 50,000 கணக்குகள் சந்தேகத்திற்கிடமான மற்றும் பணமோசடிக்குப் பயன்படுத்தப்படும் செயல்களில் ஈடுபட்டுள்ளன என்று ஒரு மூத்த அரசாங்க அதிகாரி ஒருவர் ஈடி பத்திரிக்கையிடம் தெரிவித்துள்ளார்.

Paytm Payments Bank குறித்த FIU அறிக்கை நான்கு மாதங்களுக்கு முன்பு ரிசர்வ் வங்கியிடம் கொடுக்கப்பட்டதாக மூத்த அரசு அதிகாரி தெரிவித்தார், அதன் வாயிலாகவே தற்போது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியில், ஆர்பிஐ கடுமையான நடவடிக்கை எடுக்க KYC இணங்காதது மட்டும் காரணமில்லை, வங்கியில் நடந்த விதி மீறல்களும் அடங்கும்.

நிதி அமைச்சகத்தின் விசாரணைப் பிரிவான FIU க்கு பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் ஆய்வுகளை மேற்கொள்ள அதிகாரம் உண்டு. இதன் அடிப்படையில் பேமெண்ட் கேட்வே உட்பட அனைத்து நிதி நிறுவனங்களும் சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகளைக் குறித்த நேரத்திற்குள் அரசிடம் புகாரளிக்க வேண்டும். இது ஒவ்வொரு நிதி நிறுவனத்தின் அடிப்படை பணி, பல வங்கி காலம் தாழ்த்து புகார் அளிக்கப்பட்டதற்காக அபராதம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

வங்கி அல்லது நிதி நிறுவனம் புகாரளித்த தகவல்களைப் பகுப்பாய்வு செய்து, அமலாக்க இயக்குநரகம் மற்றும் ரிசர்வ் வங்கி போன்ற ஒழுங்குமுறை அதிகாரிகளுக்குப் பல்வேறு புலனாய்வு அமைப்புகளுக்கு அனுப்புவது தான் நிதி நுண்ணறிவு பிரிவு (FIU) முக்கியப் பணியாகும்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *