பேடிஎம் யூபிஐ சேவை தொடரும்.. NPCI சொன்ன குட் நியூஸ்..!!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் நேஷ்னல் பேமெண்ட்ஸ் கார்ப்ரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) அமைப்பு, பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன்ஸ்-க்கு பல்வேறு வங்கி மாதிரி அடிப்படையில் மூன்றாம் தரப்பு பயன்பாடு வழங்குநராக (TPAP) யூபிஐ சேவையில் தொடர்ந்து பங்கேற்க ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்த ஒப்புதல் படி ஆக்சிஸ் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் யெஸ் வங்கி ஆகிய நான்கு வங்கிகள், பேடிஎம் நிறுவனத்திற்குப் பணம் செலுத்தும் முறை வழங்குநராக (PSP) செயல்பட்டு, யூபிஐ சேவையை வலுப்படுத்தும்.

மேலும் NPCI வெளியிட்டுள்ள அறிக்கையில், யெஸ் வங்கி, ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் தற்போதைய மற்றும் புதிய யூபிஐ வணிகர்களுக்கான வணிகர் கையகப்படுத்துபவராகவும் (merchant acquiring bank) செயல்படும் என தெரிவித்துள்ளது.

இதை தொடர்ந்து @paytm என்ற யூபிஐ ஐடி அனைத்தும், யெஸ் வங்கிக்கு மாற்றப்படும். இதன் மூலம், தற்போதைய பயனர்கள் மற்றும் வணிகர்கள் தொடர்ந்து எவ்விதமான இடையூறும் இல்லாமல் தொடர்ந்து யூபிஐ பரிவர்த்தனைகள் மற்றும் தானியங்க பேமெண்ட்களை (AutoPay mandates) செய்ய முடியும் என்று நேஷ்னல் பேமெண்ட்ஸ் கார்ப்ரேஷன் ஆஃப் இந்தியா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், தற்போதைய அனைத்து யூபிஐ ஐடிகள் மற்றும் தேவையான தானியங்க பேமெண்ட்களை விரைவில் புதிய பணம் செலுத்தும் முறை வழங்கும் யெஸ் வங்கிகளுக்கு மாற்றுவதற்கு பேடிஎம் நிறுவனத்திற்கு அறிவுறுத்தியுள்ளது NPCI அமைப்பு.

டிஜிட்டல் பேமென்ட் நிறுவனமான பேடிஎம்-ன் தாய் நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன்ஸ், பல்வேறு துறைகளில் இருந்து தனது பணியாளர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. சமீபத்தில் ஆர்பிஐ பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி மீது எடுத்த அதிரடி நடவடிக்கையில் இருந்து மீளாத ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் தற்போது இந்த பணிநீக்கத்தை அறிவித்துள்ளது.

பணியாளர் குறைப்பு எண்ணிக்கை இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், கடந்த இரண்டு வாரங்களில் சில துறைகளில் 20 சதவீதம் பணியாளர்கள் வரையில் குறைக்குமாறு நிர்வாகம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேடிஎம் நிறுவனத்தில் டிசம்பர் 2023ல் சுமார் 1000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், தற்போதைய பணிநீக்கம் கூடுதலாக எண்ணிக்கையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் மாத பணிநீக்கத்திற்கு முக்கியமான காரணம் AI. இதை தொடர்ந்து ஜனவரி மாதமும் பேடிஎம் நிறுவனத்தில் silent layoffs நடந்தாக சில ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *