தொப்பை கொழுப்பை வேகமாய் குறைக்கும் வேர்க்கடலை: கண்டிப்பா சாப்பிடுங்க
- குளிர்காலத்தில் வேர்க்கடலை சாப்பிடுவதால் ஏகப்பட்ட ஆரோக்கிய நன்மைகள் ஏற்படுகிறன.
- வேர்க்கடலை கரோனரி இதய நோயைத் தடுக்கும்.
- வேர்க்கடலை புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கிறது.
இன்றைய காலகட்டத்தில் உடல் எடையை குறைப்பது கடினமான மற்றும் சவாலான பணியாக மாறியுள்ளது. இதில், சரியான உடற்பயிற்சியுடன், நீங்கள் என்ன, எப்போது சாப்பிட வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். இதனுடன், தினமும் ஒரே மாதிரியான சலிப்பான உணவைச் சாப்பிடுவதற்குப் பதிலாக, நீங்கள் சுவாரஸ்யமாகவும் சுவையாகவும் இருக்கும் உணவுகளை சாப்பிட வேண்டும். நமது உணவில் சரியான அளவு நார்ச்சத்து மற்றும் புரதத்தை சேர்ப்பதால், நமது எடையை சரியாக வைத்திருக்க முடியும்.
வேர்க்கடலையின் நன்மைகள் (Benefits of Peanuts)
வேர்க்கடலை சாப்பிடுவது பல நன்மைகளை அளிக்கின்றது. மேலும் இவை உடலுக்கு பல ஊட்டச்சத்துகளை அளிக்கின்றன. உடல் ஆரோக்கியத்தையும் இவை மேம்படுத்துகின்றன. இதில் புரதம், நல்ல கொழுப்பு, பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் போன்ற பல அத்தியாவசிய தாதுக்கள் இருப்பதால், வேர்க்கடலை வலுவான தசைகள் மற்றும் ஆரோக்கியமான உடலை பராமரிக்க உதவுகிறது. வேர்க்கடலையில் மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் உள்ளன. இது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
இது தவிர, வேர்க்கடலையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருப்பதால், இது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. இவற்றில் உள்ள நார்ச்சத்து அதிக நேரம் வயிற்றை நிரம்பவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
குளிர்காலத்தில் வேர்க்கடலை சாப்பிடுவதால் ஏகப்பட்ட ஆரோக்கிய நன்மைகள் ஏற்படுகிறன.