இந்த பழங்களை தோலுடன் சாப்பிட்டால் நீரிழிவு நோயில் நிவாரணம் கிடைக்கும்

Health Tips: நீரிழிவு என்பது ஒரு நாள்பட்ட நோயாகும். அதை முழுமையாக குணப்படுத்த முடியாது. எனினும், இதை உணவுப்பழக்கம் மற்றும் சில உடல் செயல்பாடுகள் மூலம் பெரிய அளவில் கட்டுப்படுத்தலாம்.

நீரிழிவு நோயாளிகள் முறையான உணவுப்பழக்கத்தையும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும் பின்பற்றினால், இந்த நோயை எளிதில் கட்டுக்குள் வைத்திருக்கலாம்.

உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகமாக உள்ளவர்கள் முடிந்தவரை பழங்களையும் காய்களையும் அதிகமாக சாப்பிட அறிவுறுத்தப்படுகிறார்கள். குறிப்பாக பழங்கள் அதிகரித்த இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. சரியான உணவு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடிப்பதன் மூலமும் நீரிழிவு அபாயத்தை குறைக்கலாம். உங்கள் உணவு மற்றும் பானங்களில் சில சிறிய மாற்றங்களைச் செய்ய வேண்டும். இதன் மூலம் நீங்கள் அதிக பலன்களைப் பெறுவீர்கள். உடலில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால், பழங்களை தோல் உரிக்காமல் சாப்பிடுவது நன்மை பயக்கும். குறிப்பாக ஆப்பிள் உள்ளிட்ட சில பழங்களை தோல் உரிக்காமல் சாப்பிட வேண்டும். எந்தெந்த பழங்களை அவற்றின் தோலுடன் சாப்பிடுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று இந்த பதிவில் பார்ப்போம்.

சர்க்கரை நோயாளிகள் இந்த பழங்களை தோலுடன் சாப்பிட வேண்டும் (Fruits for Diabetic Patients)

கொய்யா (Guava):

சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பாக கொய்யா சாப்பிட வேண்டும். கொய்யாவில் இரத்தச் சர்க்கரை அளவைக் குறைக்கும் குணங்கள் உள்ளன. சிலர் கொய்யாப்பழத்தை தோலை நீக்கி சாப்பிடுகிறார்கள். இது தவறு. கொய்யாத் தோலில் உள்ள நார்ச்சத்து மற்றும் சத்துக்கள் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகின்றன.

ஆப்பிள் (Apple):

இப்போதெல்லாம் பெரும்பாலான மக்கள் ஆப்பிளின் தோலை நீக்கி சாப்பிடுகிறார்கள். ரசாயனங்கள் மற்றும் மெழுகு இருக்குமோ என்ற அச்சம் காரணமாக பல நேரங்களில் மக்கள் இதைச் செய்கிறார்கள். ஆனால் ஆப்பிளுக்கான சீசனில் ஆப்பிளை உரிக்காமல் சாப்பிட வேண்டும். ஆப்பிள் சாப்பிடுவதன் மூலம் உயர் இரத்த சர்க்கரை (Blood Sugar level) அளவை குறைக்கலாம். தோலை நீக்காமல் சாப்பிட்டால் சர்க்கரை நோயில் இரட்டிப்பு பலன்கள் கிடைக்கும்.

பப்பாளி (Papaya):

பப்பாளி நீரிழிவு நோயாளிகளுக்கு (Diabetic Patients) மிகவும் பயனுள்ள பழமாகும். பப்பாளி சாப்பிடுவதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு வேகமாக குறையும். பெரும்பாலானோர் பப்பாளி பழத்தை தோலை நீக்கிய பிறகே சாப்பிட்டாலும், சர்க்கரை நோயாளிகள் பப்பாளியை தோலுடன் சேர்த்து சாப்பிட்டால் பலன்கள் மேலும் அதிகரிக்கும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *