மக்களே உஷார்..! தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு சுகாதாரத்துறை அலர்ட்..!
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம், பொடலகுரு மண்டலம் சட்லகுட்டா, கும்மல்லா திப்பா ஆகிய பகுதிகளில் பறவைக் காய்ச்சல் நோய் தாக்கி 100-க்கும் மேற்பட்ட கோழிகள் இறந்தன. திருப்பதி மாவட்டம் போல் புலிக்காட் ஏரியில் இருந்து புலம் பெயர்ந்த பறவைகள் மூலம் இந்த நோய் பரவியுள்ளது. ஆந்திராவில் இதனை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பறவை காய்ச்சல் காரணமாகவே பறவைகள் உயிரிழந்திருப்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு பறவை காய்ச்சல் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 5 மாவட்டங்களிலும் தீவிரமாக கண்காணிக்கும் படி தமிழக சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.மேலும் தமிழக மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.