மக்களே உஷார்..! குடிநீரை வீணடித்தால் ரூ.5,000 அபராதம்..!
தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக அதிகபட்சமான குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. அதிக அளவிலான குடியிருப்புகள் உள்ளதால் தண்ணீர் பற்றாக்குறை அங்கு அதிகரித்துள்ளது. இதனால் பெங்களூரு நீர் வழங்கள் மற்றும் கழிவு நீர் வாரியம் ஆனது நகரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் காரணத்தினால் தோட்டங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுதல், வாகனங்களை கழுவுதல் போன்ற அத்தியாவசியமற்ற வேலைகளுக்கு பயன்படுத்தும் பட்சத்தில் ரூபாய் 5000 அபராதம் விதிக்கப்படும் என்று உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவின் படி இது போன்ற விஷயங்களுக்கு மறுசுத்திகரக்கப்பட்ட நீரை பயன்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் மக்கள் அனைவரும் குடிநீரை சேமிக்கும் படியும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
பெங்களூரில் நிலவும் கடுமையான தண்ணீர் பஞ்சம் காரணமாக அங்கே இருக்கும் மக்களுக்கு குடிக்க, குளிக்க கூட தண்ணீர் இல்லை என்று மக்கள் தெரிவித்துள்ளனர். பெங்களூர் நகரின் பல பகுதிகளில் உள்ள ஆழ்துளை கிணறுகள் வறண்டு கிடப்பதால் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குடியிருப்பாளர்கள் தங்கள் அன்றாட வேலைகளுக்கு தண்ணீர் டேங்கர்களை நம்பியிருக்கிறார்கள், அவை பெரும்பாலும் தண்ணீர் பஞ்சம் காரணமாக மிக அதிகப்படியான தொகையை வசூலிக்கின்றன.