மக்களே உஷார்..! இனி போலி பில் தயாரித்தால் இந்த நிலை தான்…!

சேலம் கோட்ட வணிக வரித் துறை சார்பில் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த வணிகர்கள் பங்கேற்றனர். வணிகவரித்துறை மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் இந்த கூட்டத்திற்கு தலைமை வகித்துள்ளார். வணிகர்கள் தெரிவிக்கும் கோரிக்கைகள் குறித்து முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு நிறைவேற்றப்படும் என்றும் போலி ரசீதுகள் மூலம் வரி ஏய்ப்பு செய்பவர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வகையில் போலி பில் பட்டியல் தயாரித்து வணிகம் செய்பவர்களின் ஜிஎஸ்டி பதிவை முடக்கி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் தொடர் முறைகேட்டில் ஈடுபடுவோரை கண்காணித்து ஜிஎஸ்டி பதிவை முடக்க அதிகாரிகளுக்கு உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் போலி பில் பட்டியல் தயாரித்து வணிகம் செய்வது குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.