வியப்புடன் பார்க்கும் மக்கள்..! அயோத்தி தாம் ரயில் நிலையத்தில் 15 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட அணில்..!

வடக்கு ரயில்வே மண்டலத்தில் உள்ள லக்னோ கோட்டம் ஒரு முக்கியமான விஷயத்தை செய்திருக்கிறது. அதாவது, ராமர் கோயிலில் தரிசனம் செய்ய நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ரயிலில் பயணிப்பவர்கள் அயோத்தி தாம் ரயில் நிலையத்திற்கு தான் வருகை புரிவர்.

இந்த ரயில் நிலையத்தில் 15 அடி உயரம் கொண்ட கார்டன் ஸ்டீலால் உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட அணிலை அயோத்தி தாம் ரயில் நிலையத்தின் ஆட்ரியம் சென்டர் ஸ்பேஸில் வைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதை பெங்களூருவை சேர்ந்த கல்யாண் எஸ்.ரத்தோர் என்ற கலைஞர் உருவாக்கியுள்ளார். தற்போது அணிலின் கட்டமைப்பு முழுமை பெற்றுவிட்டது.

சுருக்க வடிவியல் கணிதக் கோட்பாடுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. பழங்காலத்தில் ஒற்றை கல்லால் வடிக்கப்பட்ட சிலைகளை பார்க்கும் போது எப்படிப்பட்ட அனுபவம் கிடைக்குமோ, அதேபோல் தான் இந்த அணிலும் இருக்கும் எனக் கூறியுள்ளனர். இது பக்தர்களுக்கு நிச்சயம் ஆச்சரியமளிக்கும். இதையும் வழிபட்டு விட்டு செல்வர் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவை MDF எனப்படும் ஃபைபரால் செய்யப்பட்டது. இது எல்.இ.டி விளக்குகள் மூலம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதை அயோத்தி ரயில் நிலையத்திற்கு கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *