50 வயதிற்கு மேற்பட்டவர்கள் கொலஸ்ட்ராலை குறைக்க எந்த மாதிரியான உணவுகளை சாப்பிடணும் தெரியுமா?
Cholesterol-Lowering Veggies And Fruits In Tamil: உங்களுக்கு 50 வயதாகிவிட்டதா? உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளதா?
அப்படியானால் உடனே கொலஸ்ட்ராலைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபடுங்கள். ஏனெனில் சமீப காலமாக மாரடைப்பினால் நிறைய பேர் மரணமடைந்து வருகிறார்கள். மாரடைப்பிற்கு முதன்மையான காரணம் உயர் கொலஸ்ட்ரால் தான்.
எப்படியெனில் கொலஸ்ட்ரால் உடலில் அதிகரிக்கும் போது, இதயத்திற்கு செல்லும் இரத்தக் குழாய்களில் அப்படியே படிந்து, இரத்த ஓட்டத்தில் தடையை ஏற்படுத்தி, மாரடைப்பு, பக்கவாதம் போன்ற இதய நோய்களின் அபாயத்தை அதிகரித்து, ஒரு கட்டத்தில் உயிரையே பறித்துவிடுகிறது.
கொலஸ்ட்ராலைக் குறைக்க மருத்துவர்கள் மாத்திரைகளை வழங்கியிருந்தாலும், உண்ணும் உணவுகளிலும் கவனத்தை செலுத்த வேண்டும். அப்படி உணவுகளில் கவனம் செலுத்தி, கொலஸ்ட்லைக் குறைக்கும் உணவுகளை தினசரி உணவில் சேர்த்து வந்தால், கொலஸ்ட்ராலைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும்.
அதுவும் 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் கொலஸ்ட்ராலைக் குறைக்க எந்த மாதிரியான பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டுமானால், இக்கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே 50 வயதிற்கு மேல் கொலஸ்ட்ரால் குறைய சாப்பிட வேண்டிய பழங்கள் மற்றும் காய்கறிகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.
ஆப்பிள்
ஆப்பிளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளன. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் தீங்கு விளைவிக்கும் ப்ரீ ராடிக்கல்களில் இருந்து இதயத்திற்கு பாதுகாப்பளிக்கிறது. மேலும் இதில் உள்ள வைட்டமின் சி இதயத்தை சீராக செயல்பட வைக்கிறது. எனவே கொலஸ்ட்ரால் குறையவும், இதயம் ஆரோக்கியமாக செயல்படவும் வேண்டுமானால், தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிடுங்கள். இது இதய ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.