மக்கள் பீதி..! மீண்டும் பரவும் 5 கோடி பேரை கொன்ற கொடூர வைரஸ்..!

அமெரிக்காவின் ஓரிகான் மாகாணத்தில் புபோனிக் பிளேக் என்ற அரிய வகை நோய் பாதிக்கப்பட்ட நபர் கண்டறியப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நோய் மனிதர்களுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. இந்த நோய் இன்னும் வளர்ச்சி பெறாத நாடுகளில் பொதுவாக காணப்படுகிறது, எனினும் குணவாக்கக் கூடியதுதான் என்றும் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், இந்த நோயால் இன்னும் பல ஆபத்துகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஓரிகான் சுகாதார ஆணையம், இந்த பிளேக் நோய் அப்பகுதியில் அரிதாக இருப்பதாக தெரிவித்துள்ளது. கடைசியாக 2015-ம் ஆண்டில் ஒருவர் அங்கு பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

பண்டைய காலங்களில் ஐரோப்பிய கண்டத்தின் மூன்றில் ஒரு பங்கு மக்களின் இந்த நோய் காவு வாங்கியதாகவும் கூறப்படுகிறது. அந்த காலத்தில் இதனை Black Death என்றும் அழைக்கின்றனர். 14-ம் நூற்றாண்டில் ஐரோப்பா முழுவதும் இந்த Black Death என்று அழைக்கப்படும் பிளேக் நோய் பரவியது. மனித வரலாற்றில் மிகக் கொடிய தொற்றுநோய்களில் ஒன்றான 5 கோடிக்கும் மேற்பட்டவர்களை இந்த நோய் காவு வாங்கியது.

அமெரிக்காவின் ஓரிகான் மாகாணத்தில் உள்ல டெஸ்சூட்ஸ் கவுண்டியில் உள்ள இந்த நோயால் பாதிக்கப்பட்டவர் கண்டறியப்பட்டுள்ளார், அவரின் அடையாளம் வெளியிடப்படவில்லை. ஆனாலும், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறினர். அந்த நபர் அவரது வளர்ப்பு பூனையால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் அதிகாரிகள் கணிக்கின்றனர்.

அறிகுறிகள்:

இந்த அரிய நோயால் பாதிக்கப்பட்ட நபருடனும், அவரது செல்லப்பிராணியிடமும் நெருங்கிய தொடர்பில் இருந்த அனைத்து நபர்களும் தொடர்பு கொள்ளப்பட்டு, நோயைத் தடுக்க மருந்துகளை வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை கடந்த வாரம் டெஸ்சூட்ஸ் மாவட்ட சுகாதார அலுவரான டாக்டர் ரிச்சர்ட் ஃபாசெட் என்பவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த நோயின் அறிகுறிகளை அறிந்துகொள்வது அவசியமாகும். அந்த வகையில், காய்ச்சல், குமட்டல், பலவீனம், குளிர் மற்றும் தசை வலி ஆகியவை முக்கிய அறிகுறிகள் என்றும் கூறப்படுகிறது. முதற்கட்டமாக, புபோனிக் பிளேக்காக இருக்கும் இந்த நோய் ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டு குணப்படுத்தாவிட்டால், நுரையீரலை பாதிக்கும் நிமோனிக் பிளேக் அல்லது ரத்த ஓட்டத்தில் தொற்றை உண்டாக்கும் செப்டிசிமிக் பிளேக் ஆகியவைக்கு இட்டுச்செல்லும். இந்த இரண்டும் மிகவும் தீவரமானதாகும்.

பாதிக்கப்பட்ட செல்லப்பிராணியிடம் மனிதர்கள் தொடர்பு வைக்கும்பட்சத்தில், சுமார் 8 நாட்களுக்குள் அவர்களிடம் இந்த நோய்க்கான அறிகுறிகள் தென்பட தொடங்கும் எனவும் அதிகாரிகள் தரப்பில் பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கப்படுகின்றன.

மேலும், அதிகாரிகள் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “அதிர்ஷ்டவசமாக, இந்த அரிய வகை நோய் அதன் ஆரம்ப கட்டங்களில் கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. இது சமூகத்திற்கு சிறிய ஆபத்தை ஏற்படுத்தும். தொற்றுநோய் குறித்து பாதிக்கப்பட்ட நபரின் சுற்றத்தாரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது இந்த பிளேக் நோயால் கூடுதலாக யாரும் பாதிக்கப்படவில்லை” என குறிப்பிட்டுள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *