மக்கள் அதிர்ச்சி..! பேடிஎம்க்கு மீண்டும் ஒரு தடை..!

இந்தியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் பண பரிவர்த்தனை நிறுவனமாக பேடிஎம் நிறுவனம் இயங்கி வந்தது. விதிமுறை மீறல் காரணமாக பிப்ரவரி 29 ஆம் தேதிக்குப் பிறகு பேடிஎம் நிறுவனம் சேவை வழங்க ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. இதனை தொடர்ந்து மீண்டும் சிக்கலில் சிக்கி உள்ளது பேடிஎம். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPFO) ஆனது அதன் அதிகாரிகளை பேடிஎம் பேமெண்ட் வங்கி மூலம் செய்யப்படும் கிளைம்களை ஏற்க வேண்டாம் என்று கூறியுள்ளது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், பிப்ரவரி 23 முதல் பேடிஎம் பேமென்ட் வங்கியில் வங்கிக் கணக்குகளுடன் இணைக்கப்பட்ட கிளைம்களை ஏற்றுக்கொள்வதைத் தவிர்க்குமாறு அனைத்து கள அதிகாரிகளுக்கும் EPFO அறிவுறுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில்தான் பேடிஎம் பேமெண்ட் வங்கிக்கு உரிமைகோரல்களை (கிளைம்) தீர்ப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்த தடை அறிவிப்பு வெளியாகியுள்ளது. பேடிஎம் மீதான இந்த நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்த ரிசர்வ் வங்கி, பேடிஎம் பேமெண்ட் வங்கிக்கு எதிரான நடவடிக்கை ‘தொடர்ச்சியான இணக்கமின்மை’ காரணமாக எடுக்கப்பட்டது என்று கூறியுள்ளது.

பேடிஎம் பேமெண்ட் வங்கிக்கு எதிராகமட்டுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது Paytm செயலியை பாதிக்காது எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. எனவே பேடிஎம் ஆப் பயன்படுத்துபவர்கள் கவலைப்படத் தேவையில்லை.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *