மக்கள் அதிர்ச்சி..! இனி பாலி தீவிற்கு செல்ல சுற்றுலா வரி கட்ட வேண்டும்..!
இந்தோனேஷியாவிற்கு சுற்றுலா செல்பவர்கள் அதிகம் செல்லும் இடமாக பாலி தீவு உள்ளது. ஆஸ்திரேலியர்களால் அதிகம் விரும்பப்படும் இடமாக இத்தீவு உள்ளது. கடந்த ஆண்டு மட்டும், அந்நாட்டை சேர்ந்த ஒரு லட்சம் பேர் இங்கு வந்துள்ளனர். இதற்கு அடுத்த இடங்களில், இந்தியா, சிங்கப்பூர், சீனாவைச் சேர்ந்தவர்கள் உள்ளனர்.
இந்நிலையில், இந்த தீவுக்கு சுற்றுலா வருபவர்கள் 10 டாலர் சுற்றுலா வரி கட்ட வேண்டும் என அந்நாட்டு அறிவித்துள்ளது. அத்தீவின் கலாசாரம் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக இந்த வரி விதிக்கப்படுவதாக அரசு விளக்கம் அளித்து உள்ளது.
இந்த வரி கட்டுவதில் இருந்து உள்நாட்டு சுற்றுலா பயணிகள், ஆசியான் நாட்டை சேர்ந்தவர்கள், தூதரக விசா பெற்றவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மற்ற நாட்டினர் ஆன்லைன் வாயிலாக அல்லது பாலி தீவு வந்ததும் விமான நிலையத்தில் வரி கட்ட வேண்டும் எனக் கூறியுள்ளது. கடந்த ஆண்டு இது அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் முதல் இந்த திட்டம் அமலுக்கு வந்துள்ளது.