31 கிமீ மைலேஜ் தரும் மாருதி காரை வாங்க க்யூ-வில் நிற்கும் மக்கள்… விலை இவ்ளோதானா! ஆச்சரியமா இருக்கே!
இந்திய சந்தையில் கடந்த ஜனவரி மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப்-10 கார்களின் (Top-10 Cars) பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno) முதல் இடத்தை பிடித்து அசத்தியுள்ளது. கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் 16,357 மாருதி சுஸுகி பலேனோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன.
ஆனால் இந்த எண்ணிக்கை நடப்பு 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 19,630 ஆக உயர்ந்துள்ளது. இது 20 சதவீத வளர்ச்சி ஆகும். இந்த சிறப்பான வளர்ச்சியின் மூலமாக இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் அதிகமாக விற்பனையான கார் என்ற பெருமையை மாருதி சுஸுகி பலேனோ தன்வசப்படுத்தி அசத்தியுள்ளது.
இது பிரீமியம் ஹேட்ச்பேக் (Premium Hatchback) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்திய சந்தையில் ஹூண்டாய் ஐ20 (Hyundai i20), டொயோட்டா க்ளான்சா (Toyota Glanza) மற்றும் டாடா அல்ட்ராஸ் (Tata Altroz) ஆகிய பிரீமியம் ஹேட்ச்பேக் ரக கார்களுடன், மாருதி சுஸுகி பலேனோ போட்டியிட்டு வருகிறது.
மாருதி சுஸுகி பலேனோ பிரீமியம் கார் என்பதால், மாருதி சுஸுகி நிறுவனத்தின் நெக்ஸா (NEXA) ஷோரூம்கள் மூலமாக விற்பனை செய்யப்படுகிறது. தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி பலேனோ காரின் ஆரம்ப விலை 6.66 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 9.88 லட்ச ரூபாயாக இருக்கிறது.
இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். மாருதி சுஸுகி பலேனோ கார் பெட்ரோல் (Petrol) மற்றும் சிஎன்ஜி (CNG) இன்ஜின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் பெட்ரோல்/மேனுவல் ஒரு லிட்டருக்கு 22.35 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மறு பக்கம் இதன் பெட்ரோல்/ஆட்டோமேட்டிக் மாடல் ஒரு லிட்டருக்கு 22.94 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இதன் சிஎன்ஜி/மேனுவல் மாடல் ஒரு கிலோவிற்கு 30.61 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது. இதன் சிஎன்ஜி ஆப்ஷனுடன் மேனுவல் கியர் பாக்ஸ் மட்டுமே வழங்கப்படுகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.