மக்கள் எதிர்பார்ப்பு..! EMI கட்டுபவர்களுக்கு இம்முறை கடன் சுமை குறையுமா?
மத்திய அரசின் 2024-25 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில் மக்கள் எதிர்பார்த்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. மேலும் இடைக்கால பட்ஜெட்டில், வருமான வரியில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என நிதியமைச்சர் குறிப்பிட்டு இருந்தார். இதனால் நடுத்தர மக்கள் உள்ளிட்ட பலரும் கடும் அதிருப்தி தெரிவித்து வரும் நிலையில், பிப்ரவரி 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை நாணயக் கொள்கைக் கூட்டம் நடைபெற உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இதனால் பட்ஜெட்டில் ஏமாற்றமடைந்த பலரும் நாணய கொள்கை கூட்டம் பக்கம் திரும்பி உள்ளனர். ஏனெனில் இக்கூட்டத்திற்கு பிறகு அறிவிக்கப்படும் ரெப்போ வட்டி விகிதத்தை வைத்து, மாதாந்திர EMI குறைவதற்கான வாய்ப்பு உள்ளது. இதனால் EMI கடன் சுமையிலிருந்து நிவாரணம் கிடைக்குமா? என எதிர்பார்த்து உள்ளனர். கடந்த முறை ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லாமல் 6.50 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.