விறுவிறுப்பாக நகரும் விடாமுயற்சி.. ஆனாலும் செம அப்செட்டில் திரிஷா – பாதியில் பரிதவிக்கும் மலையாள படம்!
தமிழ் சினிமா உலகில் 90ஸ் கிட்ஸ்ஸின் பேவரைட் நாயகியாக இன்றளவும் வளம் வந்து கொண்டிருக்கும் ஒரு மாபெரும் நடிகை தான் திரிஷா. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், தளபதி விஜய், தல அஜித், விக்ரம், சூர்யா என்று இவர் ஜோடி போட்டு நடிக்காத முன்னணி நடிகர்களை தமிழ் சினிமாவில் இல்லை என்று கூறும் அளவிற்கு பல முன்னணி நடிகர்களோடு திரிஷா நடித்துள்ளார்.
இந்த சூழலில் கடந்த 2016 ஆம் ஆண்டு பிரபல நடிகர் தனுஷ் நடித்து வெளியான “கொடி” திரைப்படத்திற்கு பிறகு பெரிய அளவில் படங்கலில் நடிப்பதிலிருந்து ஒதுங்கியே இருந்தார் திரிஷா. 2017ம் ஆண்டு அவர் நடிப்பில் படங்களே வெளியாகாதது அதற்கு சாட்சி. இந்த சூழ்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் மூலம் கிடைத்த வரவேற்பு தற்போது மீண்டும் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
தற்பொழுது தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் “விடாமுயற்சி” படத்தில் நடித்து வரும் திரிஷா, கமலின் Thug Life படத்திலும் நடித்து வருகின்றார். மேலும் மலையாளத்தில் ராம் மற்றும் identity என்ற இரண்டு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இருப்பினும் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வந்தாலும் அதிக நேரம் எடுக்கும் காரணத்தினால் தான் கால்ஷீட் கொடுத்திருக்கும் இரு மலையாள திரைப்படங்களில் நடிப்பதில் பெரும் சிக்கலை சந்தித்து வருகின்றார் திரிஷா என்று கூறப்படுகிறது.
முதலில் விடாமுயற்சி படத்தில் இருந்து அவர் விலகியதாக தகவல் வந்ததும் குறிப்பிடத்தக்கது. ஆகவே விடாமுயற்சி பணிகளை முடித்த உடனே, இரு மலையாள பட பணிகளை துவங்குவார் திரிஷா.