பெட்ரோல், டீசல் விலை… மார்ச் மாதத்திற்கான அறிவிப்பை வெளியிட்ட ஐக்கிய அரபு அமீரகம்
மார்ச் மாதத்திற்கான சில்லறை எரிபொருள் விலையை ஐக்கிய அரபு அமீரகம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
மார்ச் மாதத்திற்கான பெட்ரோல் விலை
சராசரியாக உலகளாவிய எண்ணெய் விலையின் அடிப்படையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் எரிசக்தி அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட எரிபொருள் விலை ஒவ்வொரு மாதமும் நிர்ணயம் செய்யப்படுகிறது.
பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் மார்ச் மாதத்திற்கான பெட்ரோல் விலையை லிற்றருக்கு 15 முதல் 16 ஃபில்ஸ் வரை எரிபொருள் விலை கண்காணிப்பு குழு உயர்த்தியுள்ளது.
சூப்பர் 98 லிற்றருக்கு 2.88 திர்ஹாம் என இருந்த நிலையில், மார்ச் மாதத்தில் லிற்றருக்கு 3.03 திர்ஹாம் என அதிகரிக்கப்பட்டுள்ளது. ஸ்பெஷல் 95 லிற்றருக்கு 2.76 திர்ஹாம் என விற்கப்பட்ட நிலையில், தற்போது 2.92 திர்ஹாம் என அதிகரிக்கப்பட்டுள்ளது.
இ-பிளஸ் 91 லிற்றருக்கு 2.69 திர்ஹாம் என இருந்த நிலையில், தற்போது 2.85 என அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் வாகனத்தை பொறுத்து மார்ச் மாதத்தில் 7.65 திர்ஹாம் முதல் 11.84 திர்ஹாம் வரையில் பெட்ரோல் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
சராசரியாக 51 லிற்றர் கொள்ளளவு கொண்ட ஒரு வாகனத்திற்கு சூப்பர் 98 பெட்ரோல் நிரப்ப 154.53 திர்ஹாம் செலவாகும். செடான் போன்ற 62 லிற்றர் கொள்ளளவு கொண்ட ஒரு வாகனத்திற்கு சூப்பர் 98 பெட்ரோல் நிரப்ப 187.86 திர்ஹாம் செலவாகும்.
74 லிற்றர் SUV வாகனம் என்றால், சூப்பர் 98 பெட்ரோல் நிரப்ப 224.22 திர்ஹாம் செலவாகும் என்றே தெரிய வந்துள்ளது.