கூகுள்-க்கு வேட்டு வைத்த PhonePe.. ஷாக்கான சுந்தர் பிச்சை..!!

இந்தியா மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் பெரிய அளவில் ஆப் ஸ்டோரில் ஆதிக்கம் செய்வது கூகுள் மற்றும் ஆப்பிள் தான். இந்த ஆதிக்கத்தை உடைக்கப் பல நிறுவனங்கள் பல முயற்சிகள் செய்து வெற்றி அடையாவிட்டாலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் மக்களின் தினசரி வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறியிருக்கும் போன்பே, அடுத்தடுத்து பல புதிய வர்த்தகத்தில் களமிறங்கி வரும் வேளையில் ஆப் ஸ்டோர் வர்த்தகத்திலும் இறங்கியுள்ளது.

இந்தியாவில் கூகுள் ப்ளேஸ்டோர் ஆதிக்கம் மிகப்பெரியது, இந்தியாவில் 95 சதவீதம் பேர் ஆண்டிராய்டு போன்களை மட்டுமே பயன்படுத்தும் காரணத்தால் கூகுள் ப்ளேஸ்டோரை நம்பியிருக்கும் நிலை உள்ளது. இது மக்களுக்கும், சரி ஆப்-களை உருவாக்கும் நிறுவனங்களும் சரி.

சமீபத்தில் கூகுள் தனது ப்ளேஸ்டோர் ஆதிக்கத்தைப் பயன்படுத்தி பல பணிகளை முறைகேடாகவும், தனக்குச் சாதகமாகவும் செய்துகொள்வதாக கண்டுபிடித்து அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் ஆப்-களை உருவாக்குவோருக்கும், அவர்களது பேமெண்ட்-க்கும் பல நெருக்கடிகளைக் கொடுத்து வருவதாகப் புகார்கள் தொடர்ந்து எழுந்து வருகிறது.

இந்த நிலையில் APP Store முக்கிய வர்த்தக வாய்ப்பு என்பதை உணர்ந்த போன்பே Indus Appstore என்ற பெயரில் மேக் இன் இந்தியா பிராண்டில் புதிய ஆப் ஸ்டோரை உருவாக்கி பிப்ரவரி 21 ஆம் தேதி அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் Google Play ஆதிக்கத்தை உடைப்பதற்காகவே இத்தளத்தை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

அமெரிக்காவில் வால்மார்ட் கட்டுப்பாட்டில் இயங்கும் போன்பே Indus Appstore தளத்தில் சுமார் 45 பிரிவில் 12 மொழிகளில் 2 லட்சம் மொபைல் ஆப் மற்றும் கேம்ஸ்-களைக் கொண்டு வர இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இந்தியாவில் தற்போது அதிக டிமாண்ட் இருக்கும் பிராந்திய மொழி APP-களுக்கான வெற்றிடத்தை நிரப்ப Indus Appstore வந்துள்ளது.

இதேபோல் அதிகப்படியான வாடிக்கையாளர்களை ஈர்க்கவும், தக்க வைத்துக்கொள்ளவும் ஷாட் வீடியோ தளமும் இதனுடன் இணைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஷாட் வீடியோ தளம் மற்றும் ஆப் ஸ்டோர் இரண்டும் ஒன்றாக ஒரே தளத்தில் அளிக்க உள்ளது.

இந்த ஆப் ஸ்டோரில் ஆப் டெவலப்பர்கள் தங்களுக்கு விருப்பமான 3ஆம் தரப்புப் பேமெண்ட் கேட்வே பயன்படுத்திக்கொள்ள முடியும், இதற்கு எந்தக் கமிஷனும் தனியாக விதிக்கப்படுவது இல்லை எனப் போன்பே தெரிவித்துள்ளது. இதுதான் கூகுள் ப்ளேஸ்டோரில் இருந்த முக்கியமான பிரச்சனை.

இதேபோல் போன்பே-வின் Indus Appstore ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான நோக்கியா, லாவா ஆகிய இரண்டு நிறுவனங்கள் உடன் கூட்டணியை உருவாக்கியுள்ளது. இந்தக் கூட்டணி மூலம் நோக்கியா, லாவா போன்களில் டீபால்ட் ஆக Indus Appstore வர வாய்ப்பு உள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *