மாடர்ன் உடையில் முகம்சுழிக்கும் புகைப்படம்! லாஸ்லியாவை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்

பிரபல நடிகை லாஸ்லியா மாடர்ன் உடையில் வெளியிட்டுள்ள கிளாமர் புகைப்படம் தீயாய் பரவி வருகின்றது.

லாஸ்லியா
இலங்கையில் உள்ள கிளிநொச்சியில் பிறந்த பிரபல நடிகை லாஸ்லியா மரியநேசன், பிரபல ரிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இவர் இலங்கையில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார். அதன் பின்பு தான் கடந்த 2019ம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார்.

இவருக்கு என்று தனி ஆர்மியே உருவானது. அந்த அளவிற்கு பிக் பாஸ் வீட்டிற்குள் நியாயத்தை பேசி அனைவரது மனதிலும் இடம் பிடித்தார்.

ஆனால் இந்த சீசனில் மூன்றாவது இடத்தினை பெற்ற இவர், 2021ம் ஆண்டு பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிப்பில் வெளியான ப்ரண்ட்ஷிப் படத்தில் அறிமுகமானார்.

மாடர்ன் உடையில் கிளாமர் புகைப்படம் அதன் பின்பு கூகுள் குட்டப்பா படத்திர் தர்ஷனுடன் ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையைக் கிளப்பினார்.

கடந்தாண்டு அன்னபூரணி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது சினிமா வாய்ப்பு எதுவும் கிடைக்காமல் இருக்கும் லாஸ்லியா அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.

இந்நிலையில் தற்போது மாடர்ன் உடையணிந்து கிளாமராக புகைப்படம் வெளியிட்டுள்ளார். இதனை அவதானித்த ரசிகர்கள் வேறுவிதமாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *