PKL10 – முதல் முறையாக டிராபியை சுமக்க போகும் அணி எது? ஃபைனலில் ஹரியானா ஸ்டீலர்ஸ் vs புனேரி பல்தான்!

புரோ கபடி லீக் தொடரின் 10ஆவது சீசனில் இடம் பெற்ற 12 மணிகளில் கடைசியாக புனேரி பல்தான் மற்றும் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன. இந்த சீசனில் புனேரி பல்தான் விளையாடிய 22 போட்டிகளில் 17ல் வெற்றியும், 2ல் தோல்வியும், 3 போட்டிகளில் டையும் அடைந்து 96 புள்ளிகள் பெற்று நேரடியாக அரையிறுதிப் போட்டிக்கு வந்தது.

இதில், அரையிறுதிப் போட்டியில் பாட்னா பைரேட்ஸ் அணியை 16 புள்ளிகள் வித்தியாசத்தில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதுவரையில் ஒரு முறை கூட புனேரி பல்தான் அணியானது டிராபியை கைப்பற்றியது இல்லை. கடந்த முறை நடந்த 9ஆவது சீசனில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியானது, புனேரி பல்தான் அணியை வீழ்த்தி சாம்பியானது. எனினும், இந்த முறை டிராபியை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதே போன்று, ஹரியானா ஸ்டீலர்ஸ் விளையாடிய 22 போட்டிகளில் 13ல் வெற்றியும், 8ல் தோல்வியும், ஒரு போட்டியில் டையும் அடைந்து 70 புள்ளிகளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடம் பிடித்தது. இதையடுத்து நடந்த 2ஆவது அரையிறுதிப் போட்டியில் 2 முறை சாம்பியனான ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை 4 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஹரியானா ஸ்டீலர்ஸ் முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இதையடுத்து ஹரியானா ஸ்டீலர்ஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகள் இன்று நடக்கும் இறுதிப் போட்டியில் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி முதல் முறையாக டிராபியை வெல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.புனேரி பல்தான் மற்றும் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகளுக்கு இடையிலான புரோ கபடி லீக் தொடரின் இறுதிப் போட்டி இன்று இரவு 8 மணிக்கு ஹைதராபாத்தில் நடைபெறுகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *