நடுவானில் வானில் பறந்த விமானத்தின் கதவு: அலறிய பயணிகள்: அடுத்து நடந்தது என்ன?

நடுவானில் பறந்து கொண்டு இருந்த விமானத்தின் கதவு திடீரென திறந்ததால் அவசர அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டது.

நடுவானில் திறந்த விமானத்தின் கதவு

171 பயணிகள் மற்றும் 6 விமான பணியாளர்களுடன் அலாஸ்கா விமான நிறுவனத்தின் போயிங் 737-9 MAX விமானம்(Boeing 737 Max Flight) போர்ட்லேண்டில் இருந்து ஒண்டாரியோ-வுக்கு புறப்பட்டது.

விமானம் நடுவானில் பறந்து கொண்டு இருந்த போது யாரும் எதிர்பாராத வகையில், நடுப்பகுதியில் இருந்த வெளியேறும் கதவு திடீரென திறந்தது, இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் பயத்தில் கூச்சலிட்டனர்.

இந்த தகவல் உடனடியாக விமானிக்கு தெரிவிக்கப்பட்டது, அவர் உடனடியாக விமானத்தை போர்ட்லேண்ட் விமான நிலையத்தில் தரையிறக்கினார்.

இதனால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதற்கிடையில் விமானத்தின் கதவு திறந்த பயங்கர காட்சியை சில பயணிகள் தங்களது செல்போனில் பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

விசாரணை

இந்நிலையில் இந்த எதிர்பாராத விபத்து எவ்வாறு நடைபெற்று என்பது குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம் என அலாஸ்கா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

கண்காணிப்பு அமைப்பு ஒன்று, விமானம் 16, 325 அடி உயரத்தில் பறந்து கொண்டு இருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது என தெரிவித்துள்ளது.

விமான பயணிகள் சிலர் வெளியேறும் கதவு முற்றிலுமாக விமானத்தை விட்டு தனியாக விலகி சென்றதாக தெரிவித்துள்ளனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *