தயவு செய்து இந்த எண்ணை தொடா்பு கொள்ள வேண்டாம் – மத்திய அரசு எச்சரிக்கை..!

தொலைத்தொடா்பு சேவை வழங்கும் நிறுவனங்களின் வாடிக்கையாளா் சேவை மைய பிரதி அல்லது தொழில்நுட்ப பணியாளா் என்ற பெயரில் தொடா்புகொள்ளும் மா்ம நபா்கள், சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரின் சிம் கார்டு அல்லது தொலைத்தொடா்பில் பிரச்னை ஏற்பட்டுள்ளதாகக் கூறுகின்றனா். இந்தப் பிரச்னையைச் சரிசெய்ய ‘ *401#’-ஐ தொடா்ந்து அவா்கள் கூறும் செல்பேன் எண்ணை டயல் செய்யுமாறு கூறுகின்றனா்.

இதைச் செய்வதன் மூலம் வாடிக்கையாளருக்கு வரும் அழைப்புகள், அடையாளம் தெரியாத கைப்பேசி எண்ணுக்குத் திருப்பி அனுப்பப்படுகிறது. இதைப் பயன்படுத்தி, மா்ம நபா்கள் மோசடி சம்பவங்களில் ஈடுபடுகின்றனா். இந்நிலையில், இது போன்ற மோசடி அழைப்புகள் குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு மத்திய தகவல்தொடா்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கையில், ‘எந்த தொலைத்தொடா்பு சேவை வழங்கும் நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளா்களைத் தொடா்பு கொண்டு ‘*401#’ எண்ணை டயல் செய்யுமாறு கூறுவது இல்லை.  அவ்வாறு டயல் செய்து, வரக் கூடிய அழைப்புகள் வேறொரு கைப்பேசி எண்ணுக்குத் திருப்பி அனுப்பப்பட்டால், கைப்பேசி அமைப்பில் அழைப்புகளைத் திருப்பி அனுப்பும் வசதியை உடனடியாக செயலிழக்கச் செய்யவேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *