தயவு செஞ்சு இத மட்டும் சொல்லாதீங்க.., ரூ.20 கோடி லொட்டரியை வென்றவர் அதிகாரியிடம் கோரிக்கை
கேரளாவில் லொட்டரி சீட்டு குலுக்கலில் ரூ.20 கோடியை வென்றவர் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
கேரளா லொட்டரி
கேரள அரசு கடந்த நவம்பர் மாதம் கிறிஸ்துமஸ் புத்தாண்டு பம்பர் லாட்டரி டிக்கெட்டை அறிவித்தது. எப்போதும் போல இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பரிசு தொகையையும் உயர்த்தியது.
இதில் முதல் பரிசாக ரூ.20 கோடி, இரண்டாம் பரிசாக 20 பேருக்கு தலா 1 கோடி ரூபாய், 10 வரை பரிசுகளும், ஆறுதல் பரிசுகளும் அறிவிக்கப்பட்டன. இதனால், பொதுமக்கள் லொட்டரி டிக்கெட்டை வாங்கி குவித்தனர்.
இதில் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட லொட்டரிகள் விற்பனையாகி இருந்தது. இந்நிலையில், கடந்த ஜனவரி 24 -ம் திகதி லொட்டரிக்கான குலுக்கல் நடைபெற்றது. அதில், முதல் பரிசான ரூ.20 கோடி வென்ற பரிசு சீட்டு எண்கள் அறிவிக்கப்பட்டிருந்தது.
ரூ.20 கோடி லொட்டரி வென்றவர் கோரிக்கை
ரூ.20 கோடி லொட்டரிக்கான பரிசு XC224091 என்ற எண்ணுக்கு விழுந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த லொட்டரி சீட்டை பாலக்காட்டைச் சேர்ந்த ஷாஜகான் என்ற விற்பனையாளர் விற்பனை செய்துள்ளார்.
அவரிடம் இருந்து திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மற்றொரு விற்பனையாளர் வாடிக்கையாளர் ஒருவருக்கு விற்பனை செய்தார். தற்போது, இந்த ரூ.20 கோடி லொட்டரிக்கான சீட்டை வாங்கியவர் புதுச்சேரியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
இவர், தனக்கு ரூ.20 கோடி பரிசு விழுந்துள்ளதால் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக நினைத்துள்ளார்.
இதனால் தன்னைப் பற்றிய தகவல்களை வெளியிட வேண்டாம் என வங்கி அதிகாரிகள் மற்றும் லொட்டரி நிறுவன அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.