Police Encounter: போலீஸ் என்கவுண்டரில் 2 ரவுடிகள் சுட்டுக்கொலை – காஞ்சிபுரத்தில் பரபரப்பு

காஞ்சிபுரத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி பிரபாகரன் என்பவர் நேற்று பகலில் பிள்ளையார்பாளையம் அருகே ஓடஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். பிரபாகரனை கொலை செய்துவிட்டு தப்பியோடிய குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இதனிடையே, காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடி வசூல்ராஜாவின் கூட்டாளிகள் ரகு என்ற ரகுவரன் மற்றும் கருப்பு பாட்ஷா என்ற அசான் இந்த கொலையில் ஈடுபட்டதாக தெரியவந்ததை தொடர்ந்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா்

இந்நிலையில், காஞ்சிபுரம் ரயில் நிலையம் அருகே உள்ள இந்திரா நகர் பகுதியில் ரகு மற்றும் அசான் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதிக்கு சென்று போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினா். அப்போது அங்கு பதுங்கியிருந்த ரவுடிகள் போலீசார் மீது அரிவாளால் தாக்குதல் நடத்தினா்.

இந்தத் தாக்குதலில் சிறப்பு காவல் உதவியாளா் ராமலிங்கம், காவலர் சசிகுமார் ஆகிய இருவருக்கும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, தற்காப்புக்காக போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ரவுடிகள் ரகு, அசான் இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். ரவுடிகள் தாக்குதலில் காயமடைந்த போலீசார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இந்தச் சம்பவத்தால் காஞ்சிபுரம் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *