பாலிஷ் செய்யப்பட்ட அரிசி Vs பாலிஷ் செய்யப்படாத அரிசி.. இரண்டி எது ஆரோக்கியத்திற்கு நல்லது..?
உடல் எடையை கட்டுப்படுத்த நினைக்கும் நபர்கள் அல்லது சர்க்கரை அளவுகளை குறைக்க நினைக்கும் நபர்கள் பாலிஷ் செய்யப்பட்ட அரிசியை சாப்பிடக்கூடாது என்பது சம்பந்தப்பட்ட பல்வேறு விதமான கோட்பாடுகள் நிலவுகிறது. ஆனால் அனைவருமே பாலிஷ் செய்யப்பட்ட அரிசிக்கு பதிலாக பாலிஷ் செய்யப்படாத அரிசியை சாப்பிடுவது பல்வேறு விதமான நன்மைகளை வழங்கப்படும்.
பாலிஷ் செய்யப்பட்ட வெள்ளை அரிசிக்கு பதிலாக பழுப்பு, கருப்பு அல்லது சிவப்பு நிற அரிசிகளான முழு அரிசிகளை தேர்வு செய்வது ஆரோக்கியத்திற்கு நல்லது.
பாலிஷ் செய்யப்பட்ட வெள்ளை அரிசியில் உமி, தவிடு போன்றவை பதப்படுத்தல் செயல்முறை மூலமாக முழுவதுமாக நீக்கப்படுகிறது. இதன் காரணமாக அவற்றில் உள்ள வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் உணவு நார்ச்சத்து இழக்கப்படுகிறது. இதுவே அதிகப்படியான பதப்படுத்தலுக்கு உட்படுத்தப்படாத வெள்ளை அரிசியை சாப்பிடுவது நல்லது.
பாலிஷ் செய்யப்பட்ட வெள்ளை அரிசியில் அதிக கிளைசிமிக் எண் இருப்பதால் அது ரத்த சர்க்கரை அளவை உடனடியாக அதிகரித்து விடலாம். இது நீரழிவு நோயாளிகளுக்கு மோசமானது.
முழு அரிசியில் காணப்படும் நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தி, குடல் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது.
முழு அரிசியில் உள்ள அதிக நார்ச்சத்து அளவு உங்களுக்கு வயிறு நிரம்பிய உணர்வைத் தருகிறது. இதுவே வெள்ளை அரிசியை சாப்பிடும் பொழுது வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படாததால் அதிகப்படியாக நம்மை சாப்பிட தூண்டி, உடல் எடை அதிகரிப்பதற்கு வழிவகுக்கிறது.
பாரம்பரியமாக நமது முன்னோர்கள் முழு அரிசியை சாப்பிட்டு வந்தனர். எனினும் அரிசி விரைவில் வீணாவதை தடுப்பதற்கும், உணவு தட்டுப்பாட்டை எதிர்த்து போராடுவதற்கும் பாலிஷ் செய்யப்பட்ட அரிசி மார்க்கெட்டுக்கு வந்தது.
பழுப்பு நிற அரிசியில் எக்கச்சக்கமான ஊட்டச்சத்துக்கள் காணப்படுகிறது. பாலிஷ் செய்யப்பட்ட அரிசி மூலமாக கிடைக்கக்கூடிய கலோரிகள் கார்போஹைட்ரேட்டுகளில் இருந்து பெறப்படுகின்றன. இதுவே பழுப்பு நிற அரிசியானது அதன் கலோரிகளை புரோட்டீனிலிருந்து பெறுகிறது. மேலும் அதில் உள்ள நார்ச்சத்து நிறைந்த உமி பசியை கட்டுப்படுத்தி, அதிகப்படியாக சாப்பிடுவதை தவிர்க்க உதவுகிறது. இதனால் சர்க்கரை சீராக வெளியிடப்பட்டு, ரத்த சர்க்கரை அளவுகள் அதிகரிப்பதை தவிர்க்கிறது.
6 வாரங்களுக்கு தொடர்ந்து 150 கிராம் பாலிஷ் செய்யப்படாத அரிசியை சாப்பிட்ட நபர்கள் உடல் எடை குறைந்தது ஆய்வு மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் பழுப்பு நிற அரிசியை மட்டுமே சாப்பிடும் பொழுது கால்சியம், இரும்புச்சத்து மற்றும் சிங்க் போன்றவை உறிஞ்சப்படுவது தடுக்கப்படுகிறது. இதனால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. நீங்கள் பழுப்பு நிற அரிசியை மட்டுமே சாப்பிடுகிறீர்கள் என்றால் இந்த விஷயத்தை மனதில் கொள்ள வேண்டும்.
பழுப்பு நீர அரிசி சாப்பிடுவதில் இருக்கக்கூடிய மிகப்பெரிய தடை அதன் சுவை மற்றும் அமைப்பு. மேலும் பழுப்பு நிற அரிசியை சமைப்பதற்கு நீண்ட நேரம் ஆகும். எனினும் இந்த சவால்களை நம்மால் சமாளிக்க முடியும். அரிசியை சமைப்பதற்கு முன்பு 30 நிமிடங்களுக்கு முன்பே ஊறவைத்த பிறகு சமைப்பது அதன் சமைக்கும் நேரத்தை குறைத்து, அரிசியை மென்மையாக்கும்.