Pongal Bus : பொங்கல் கொண்டாட்டம்.. வெறிச்சோடிய சென்னை.. 3 நாட்களில் 6.50லட்சம் பேர் அரசு பேருந்துகளில் பயணம்

பொங்கல் பண்டிகை தமிழர்கள் வாழும் அனைத்து இடங்களிலும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வாசலில் வண்ண மலர் கோலமிட்டு, புதுப்பானையில் புத்தரிசி, வெல்லமிட்டு, செங்கரும்பு, இஞ்சி- மஞ்சளுடன் தித்திக்கும் பொங்கல் வைத்து கொண்டாடி வருகின்றனர். நகர்ப்புறங்களை விட கிராமங்களில் விளையாட்டு போட்டியோடு, இயற்கை அன்னைக்கு நன்றி தெரிவித்து கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் பொங்கல் பண்டிகையை தங்களது சொந்த ஊரில், சொந்த கிராமத்தில் கொண்டாட சென்னையில் பல்வேறு பணி நிமித்தமாக தங்கியிருப்பவர்கள் திட்டமிட்டனர். இவர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்தானது இயக்கப்பட்டது. கடந்த 3 நாட்களில் இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளில் சுமார் 7 லட்சம் பேர் வரை பயணம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசு பேருந்தில் 6.50லட்சம் பேர் பயணம்

இது தொடர்பாக போக்குவரத்து துறையின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலில், பொங்கல் திருநாளினை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகளின் இயக்கம் நேற்று (14/01/2024) நள்ளிரவு 24.00 மணி நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையான 2,100 பேருந்துகளில் 2,100 பேருந்துகளும் 1514 சிறப்புப் பேருந்துகளும் ஆக கடந்த 12/01/2024 முதல் 14/01/2024 இரவு 24.00 மணி வரை 11,284 பேருந்துகளில் 6,54,472 பயணிகள் பயணித்துள்ளனர். மேலும், இதுவரை 2,44,174 பயணிகள் முன்பதிவு செய்து பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *