பொங்கல் திருநாள் நமது வாழ்வியலோடு நெருக்கமானது: அண்ணாமலை வாழ்த்து

பல மாநிலங்களில் பல்வேறு பெயர்களில் கொண்டாடப்பட்டாலும் நமது பொங்கல் திருநாள் நமது வாழ்வியலோடு நெருக்கமானது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் நாட்டு மக்களுக்குத் தங்கள் வாழ்த்துச் செய்திகளை வெளியிட்டுள்ளனர். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் தனது பொங்கல் வாழ்த்துகளைக் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

“நிலத்தில் சிந்திய வியர்வை வீண்போகாமல், பருவமழையும் காலநிலையும் பொருந்தி நின்று, நிறைந்த விளைச்சல் பெற்றதற்கு சூரியபகவானுக்கும், இயற்கை அன்னைக்கும் நன்றி சொல்லி, வரும் ஆண்டிலும் விவசாயிகளுக்குத் துணை நிற்க வேண்டும் என்று வேண்டி வணங்கும் திருநாள் நம் பொங்கல் திருநாள்.

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை என்பது வள்ளுவர் வாக்கு உலகின் அனைத்துத் தொழில்களிலும் உழவுத் தொழிலே முதன்மையானது. உணவை உற்பத்தி செய்யும் விவசாயிகளும், அவர்களுக்குத் துணையாக இருக்கும் இயற்கைக்கும், கால்நடைகளுக்கும் நன்றி சொல்லி வணங்குவது உலக உலகம் முழுவதுமே பொதுவானது. பாரதத்தின் பல மாநிலங்களில், பல்வேறு பெயர்களில் கொண்டாடப்பட்டாலும், நமது பொங்கல் திருநாள் நமது வாழ்வியலோடு நெருக்கமானது.

நம் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும், மகிழ்ச்சியையும் பிரதிபலிக்கும் பொங்கல் திருநாளைக் கொண்டாடும் தமிழ் மக்கள் அனைவருக்கும், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக இனிய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மஞ்சளும், காய்கனிகளும், இனிப்பான பொங்கலும், இல்லம் நிறை அறுவடையுமாக, பொங்கல் தினம் சிறக்கட்டும். அனைவரின் வாழ்விலும், நலமும் வளமும் பெருகட்டும். பொங்கலோ பொங்கல்!”

இவ்வாறு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தன் பொங்கல் திருநாள் வாழ்த்துச் செய்தியில் கூறியிருக்கிறார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *