கஞ்சா பயன்பாட்டுக்கு அனுமதியளித்த பிரபல ஐரோப்பிய நாடு… ஆனால் வாங்குவது எளிதல்ல
கஞ்சா பயன்பாட்டுக்கு சட்டப்பூர்வ அனுமதி அளித்து ஜேர்மன் பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
25 கிராம் வரையில்
புதிய சட்டத்தின் அடிப்படையில், 18 வயதுக்கு மேற்பட்ட ஜேர்மானியர்கள் குறிப்பிட்ட அளவு கஞ்சாவை சொந்த பயன்பாட்டிற்காக வைத்திருக்கலாம். ஆனால் கடுமையான விதிகளால் கஞ்சா வாங்குவது எளிதல்ல என கூறப்படுகிறது.
எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி தொடக்கம் பொதுவெளியில் கஞ்சா பயன்படுத்துவது சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது. மேலும், 25 கிராம் வரையில் தனியொருவர் பொதுவெளியில் கஞ்சா வைத்திருக்கலாம்.
குடியிருப்பில் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக 50 கிராம் வரையில் வைத்திருக்கலாம். பெர்லின் நகரில் பொதுவாக கஞ்சா பயன்பாட்டை பொலிசார் கண்டும் காணாமல் விட்டு வந்தனர். பொதுவெளியில் பயன்பாடு சட்டவிரோதம் மட்டுமின்றி, வழக்கும் பதியப்படலாம்.
ஆனால் கடுமையான சட்டங்கள் அமுலில் இருந்தும் ஜேர்மனியில் கஞ்சா பயன்படுத்தும் இளையோரின் எண்ணிக்கை அதிகரித்தே வந்துள்ளது. இதனையடுத்து சட்டவிரோத விற்பனையை தடுக்கவும், போலியான கஞ்சாவால் மக்கள் பாதிக்கப்படுவதில் இருந்து மீட்கவும்,
குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்கள் கஞ்சா விற்பனையால் வருவாய் ஈட்டுவதை முடக்கவும் சுகாதார அமைச்சர் Karl Lauterbach முக்கிய முடிவெடுக்க வேண்டியிருந்தது.
மூன்று மரிஜுவானா செடிகள்
இதனையடுத்தே கஞ்சா பயன்பாட்டை சட்டப்பூர்வமாக்கும் முடிவுக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பள்ளிகள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் போன்ற சில பகுதிகளில் கஞ்சா புகைப்பது சட்டவிரோதமானது.
மேலும் கஞ்சா வாங்குவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சொந்தமாக கஞ்சா செடி வளர்க்கவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஒரு வீட்டிற்கு மூன்று மரிஜுவானா செடிகள் வரை வளர்க்கலாம்.
மட்டுமின்றி, அடுத்த சில ஆண்டுகளில், புதிய சட்டத்தின் தாக்கத்தை மதிப்பிட அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அதன் அடிப்படையில் உரிமம் பெற்ற கஞ்சா விற்பனையை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.