Pori Idly and Tomato Chutney : பொரி இட்லி மற்றும் தக்காளி சட்னி! புத்தாண்டில் செய்ய புதிய காலை உணவு!
Pori Idly and Tomato Chutney : பொரி இட்லி மற்றும் தக்காளி சட்னி! புத்தாண்டில் செய்ய புதிய காலை உணவு!
தேவையான பொருட்கள்
பொரி – 200 கிராம்
தயிர் – 100 மிலி
வறுக்காத ரலை – 150 கிராம்
ஈனோ ஃப்ரூட் சால்ட் – கால் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
பொரியை ஒரு கிண்ணத்தில் போட்டு அதில் பொரி மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு நன்றாக களையவேண்டும்.
பிறகு நீரை வடித்துவிட்டு பொரியை மிக்ஸியில் கூழ் போல கெட்டியாக அரைத்துக் கொள்ளவேண்டும்.
அரைத்த பின்னர் அதில் தயிர், ரவை இரண்டையும் சேர்த்து இட்லி மாவுபோல கரைத்து வைக்க வேண்டும்.
பின்னர் தேவையான உப்பு சேர்த்து கரைத்த மாவை 20-25 நிமிடங்கள் மூடி வைத்துவிடவேண்டும்.
தக்காளிச்சட்னி
கடாயில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு, அது சூடானதும் 2 ஸ்பூன் கடலை பருப்புபோட்டு வறுத்து பின்னர் 3 பல் பூண்டு, இஞ்சி ஒரு சின்ன துண்டு, 4 வர மிளகாய்போட்டு வதக்கி, 3 தக்காளியை நறுக்கிபோட்டு நன்றாக வதக்கி எடுத்து ஆறவைத்து பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்க வேண்டும்.
தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு, 2 வரமிளகாய், சிறிது கறிவேப்பில்லை அனைத்தையும் பொரிய தாளித்துக்கொட்டவேண்டும். ருசியான தக்காளி சட்னி ரெ
மாவு கொஞ்சம் இறுகி இருக்கும். இதில் ஈனோ ஃப்ரூட் சால்ட்டும், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மீண்டும் இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக்கொள்ள வேண்டும்.
இப்போது இந்த மாவை இட்லி தட்டிலோ அல்லது கிண்ணம், டம்ளர் போன்றவற்றிலோ ஊற்றி இட்லி பானையில் வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். சூடான பொரி இட்லி ரெடி.
இது மிக மென்மையாகவும், தக்காளி சட்னியோடு சேர்த்து சாப்பிட மிகுந்த ருசியாகவும் இருக்கும்.
இந்த மாவில் பச்சை மிளகாய், வெங்காயம், குடை மிளகாய், கேரட் போன்றவற்றை சன்னமாக நறுக்கி கலந்தும் இட்லி செய்யலாம்.
இந்த புத்தாண்டுக்கு புதிய ரெசிபியை செய்து, சாப்பிட்டு மகிழுங்கள்.
நன்றி – வெங்கடேஷ் ஆறுமுகம், ஷ்யாம் ப்ரேம்.