பதவி சண்டை… அதிகார மிரட்டல் : ஹீரோ – ஹீரோயின் என்ன செய்வார்கள்? ஜீ தமிழ் சீரியல் அப்டேட்

ஜீ தமிழ் டாப் சீரியல்களின் சுவாரசிய அப்டேட்

ஜீ தமிழ் முதன்மை தமிழ் தொலைகாட்சிகளில் ஒன்றாக விளங்கி வருகிறது. ஜீ தமிழ் தொடர்ந்து புது விதமான கதை காலத்துடன் கூடிய தொடர்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதில் பல தொடர்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. இந்நிலையில் அவற்றில் அதிக டி.ஆர்.பி புள்ளிகளை பெற்றுவரும், கார்த்திகை தீபம், அண்ணா, இதயம், சீரியல்களில் சமீபமாக நடந்த சுவாரசிய நிகழ்வுகள் குறித்து காணலாம்

கார்த்திகை தீபம், சீரியலின் நேற்றைய எபிசோடில் தீபா தெரியாமல் ஷவரை திறந்து நனைந்து விட கார்த்திக் தனது துணியை கொடுக்க தீபா அதை அணிந்து கொண்ட நிலையில் இன்று, எல்லாரும் ஒன்றாக அமர்ந்து ப்ரேக் பாஸ்ட் சாப்பிட, தீபா ஸ்போர்க் ஸ்பூனில் சாப்பிட தெரியாமல் தடுமாறுகிறாள். எதிரே அமர்ந்து இருக்கும் கார்த்திக் எப்படி சாப்பிட வேண்டும் என்று சொல்லி கொடுக்கிறான்.

ஆனாலும் அது புரியாத தீபா இட்லி, தோசையை போய் எதுக்கு இப்படி சாப்பிடணும் என்று முடிவெடுத்து கையால் சாப்பிட அதை பார்த்து மற்றவர்களும் கையால் சாப்பிட தொடங்குகின்றனர். அதன் பிறகு மீனாட்சி இந்த புடவையில் நீ சூப்பரா இருக்க, கார்த்திக் உன்னையே தான் பார்த்துட்டு இருந்தான் என்று சொல்ல, தீபா அட போங்க அக்கா அவர் என்னை பார்க்கவே இல்லை என்று சொல்ல, நீ வேணும்னா பாரு கார்த்திக் உன்னை குறைந்தது மூணு முறையாவது திரும்பி பார்ப்பான் என்று சொல்கிறாள்.

அதற்கேற்றார் போல கார்த்திக் ரெண்டு முறை பார்த்து விட, தீபா மூன்றாவது முறை திரும்பி பாருங்க சார் என்று மனதுக்குள் வேண்ட கார்த்திக்கும் திரும்பி பார்க்க, தீபா சந்தோஷமடைகிறாள். அடுத்து சிதம்பரம் தீபாவுக்கு போன் செய்து என்ன எல்லாரும் குடும்பத்தோட சந்தோசமா இருக்கீங்க போல், என்னுடைய ஆளுங்க உங்களை கவனிச்சிட்டு தான் இருக்காங்க. நீ எனக்காக வந்து பாடி கொடுத்தா உங்களை கஷ்டப்படுத்த மாட்டேன். நீ வந்து பாடி கொடுத்து தான் ஆகணும் என்று மிரட்டுகிறார்.

இதை கேட்ட தீபா முடியாது சார் என்று சொல்கிறாள். அதன் பிறகு செல்பி பாட்டி எல்லாரும் எப்பயாவது தான் இப்படி ஒண்ணா சேர்ந்து வெளியே வரோம். ஜாலியா என்ஜாய் பண்ண வேண்டாமாஏதாவது போட்டி நடத்தலாம் என்று சொல்லி அதற்கான ஏற்பாடுகளை செய்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *