போஸ்டர் கேர்ள்… அமீர் கானின் முன்னாள் மனைவிகள் ரெண்டு பேரும் பண்ண வேலை தெரியுமா?.. செம ஓபன்!
மும்பை: 58 வயதாகும் பாலிவுட்டின் முன்னணி நடிகரான அமீர் கான் இரண்டு முறை திருமணம் செய்து இருவரையும் விவாகரத்தும் செய்து பிரிந்து விட்டார். ஆனால், அமீர் கானின் முதல் மனைவியும் இரண்டாவது மனைவியும் தொடர்ந்து நல்ல தோழிகளாகவே வலம் வருகின்றனர். சமீபத்தில் அமீர் கானின் 2வது மனைவி கிரண் ராவ் அளித்த பேட்டியில் அமீர் கான் பற்றியும் அவரது மூத்த மனைவியுடன் தனக்கு இருக்கும் நட்பு குறித்தும் வெளிப்படையாக பேசி பலரையும் ஷாக் ஆக்கி உள்ளார்.
பாகுபலி திரைப்படம் 1800 கோடி ரூபாய் வசூல் ஈட்டிய நிலையில், அந்த படத்தின் வசூலை முறியடிக்க பாலிவுட்டில் ஒரு ஹீரோ கூட இல்லையா என்கிற கேள்வி எழுந்தது. அப்போது தனது தங்கல் திரைப்படத்தின் மூலமாக 2000 கோடி ரூபாய் வசூலை ஈட்டி இந்தியாவின் புதிய பாக்ஸ் ஆபிஸ் பென்ச் மார்க்கை ஏற்படுத்தியவர் அமீர்கான் தான்.
லால் சிங் சத்தா தோல்வி: ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட அமீர் கானின் லகான் திரைப்படம் நாமினேஷனில் இடம்பெற்றது. அந்த படத்திற்கு பிறகு எந்த ஒரு இந்திய திரைப்படமும் அந்த இடத்தை பிடிக்கவில்லை. தொடர்ந்து பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்து வந்த அமீர்கான் தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான் மற்றும் லால் சிங் சத்தா என அடுத்தடுத்து பெரிய தோல்விகளை கொடுத்த நிலையில் கடுப்பாகி சில ஆண்டுகள் சினிமாவே வேண்டாம் என ஒதுங்கி இருக்கிறார்.
முதல் திருமணம்: ரீனா தாத்தா என்பவரை 1986 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் அமீர்கான். 2001 ஆம் ஆண்டு வெளியான லகான் திரைப்படத்திற்கு தயாரிப்பாளராகவும் தனது மனைவிக்கு பொறுப்பு கொடுத்து அழகு பார்த்திருந்தார். ஆனால் அதே ஆண்டு, லகான் திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் முதல் மனைவியை விவாகரத்து செய்தார். அந்த படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய கிரண் ராவ் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
இரண்டாவது மனைவியுடனும் விவாகரத்து : 2005 ஆம் ஆண்டு கிரண் ராவை திருமணம் செய்து கொண்ட அமீர் கான் 2021 ஆம் ஆண்டு அவரின் விவாகரத்து செய்துவிட்டார். ஆனால் தொடர்ந்து, தனது இரு மனைவிகளுடனும் நல்ல நட்பில் இருந்து வருகிறார் அமீர் கான். அமீர் கானை விட அவரது இரு மனைவிகளும் உயிர் தோழிகளாக சுற்றி வருவது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன.
அமீர் கானையே கண்டுக்க மாட்டாங்க: சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய கிரண் ராவ் நாங்க ரெண்டு பேரும் ஒன்றாக வெளியே சென்றால் அமீர்கானை கண்டுகொள்ளாமல் புகைப்படக் கலைஞர்கள் ஃபோக்கஸ் செய்வார்கள். அவங்களுக்கு அப்படி ஒரு ஆச்சரியம். எப்படி முன்னாள் மனைவிகள் இருவரும் நட்புடன் பழகி வருகின்றனர் என்று என அசால்ட்டாக பேசி அசத்தி விட்டார்.
போஸ்டர் கேர்ள்: எங்க இருவருக்குமே போஸ்டர் கேர்ளாக இருக்க ரொம்பவே பிடிக்கும். அமீர்கானின் முன்னாள் மனைவிகள் எப்படி வெளியே ஒன்றாக சுத்துறாங்க பாருங்க என அமீர்கான் போட்டோவையே விட்டு விட்டு எங்க போட்டோக்களை பெருசா போட்டு ஒட்டிடுவாங்க என கலாய்த்துப் பேசியுள்ளார்.
நாங்க ஒரு எக்ஸாம்பிள்: திருமண உறவு ரொம்பவே முக்கியம். ஆனால், அது செட்டாகவில்லை என்றால் பிரிந்து வாழ்வதில் எந்தவொரு தவறும் இல்லை. ஆனால், அதற்காக எதிரிகள் போல நடக்காமல், நண்பர்களாக நம்முடைய குழந்தைகளுக்காக நட்பாக இருப்பது ரொம்பவே அவசியம் இதற்கு நாங்க இருவருமே ஒரு உதாரணமாக இருந்தால் சந்தோஷம் தான் எனக் கூறியிருக்கிறார்.