போட்ரா பிரேக்க.. ஸ்கூட்டியில் வேகமாக வந்து சுவரில் மோதி விபத்து.. பல்டி அடித்த இளம்பெண்கள்..!!
விபத்துகள் தொடர்பான வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகின்றன. இந்த நிலையில்
சமீபத்தில், விபத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர்களில் இரண்டு பெண்கள் ஸ்கூட்டியில் அதிவேகமாக பயணித்துள்ளனர்.
அப்போது சாலை வளைவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்த ஸ்கூட்டி சாலையோரம் உள்ள தடுப்பு சுவரில் பலமாக மோதியது. இதில், ஸ்கூட்டியின் பின்புறம் அமர்ந்திருந்த பெண் சுவர் மீது விழுந்துள்ளார். இதைப் பார்த்த மற்றொரு பெண் கூச்சலிடுகிறாள். இவை அனைத்தும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்த வீடியோ இணையத்தில் வெளியானதை அடுத்து 2.5 மில்லியன் பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது. மேலும் இந்த வீடியோவின் கீழ் நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்து வருகின்றனர்.