புழுங்கல் அரிசி சாதத்தில் முதல் நாளே தண்ணீர் ஊற்றி வைத்து, அந்த நீரை மறுநாள் உப்பு கலந்து…
புழுங்கல் அரிசி சாதத்தில் முதல் நாளே தண்ணீர் ஊற்றி வைத்து, அந்த நீரை மறுநாள் உப்பு கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட களைப்பு நீங்கும்.
நாள்தோறும் பல் மட்டும் தேய்த்தால் போதாது. பல் தேய்த்த பின் நாக்கையும் வழித்து சுத்தம் செய்ய வேண்டும். உப்புத் தூளை நாக்கில் தேய்த்தும் சுத்தம் செய்யலாம். நாக்கு சுத்தமாக இருந்தால் ஆரோக்கியம்தான்.
சோற்றுக்கற்றாழையை கண்ணாடி போல அலசி வெறும் வயிற்றில் விழுங்க, உடல் சூடு தணியும். வயிற்றுக்கோளாறுகள் நீங்கும்.
தலைமுடி உதிரத் தொடங்குகிறதா.. 25 கிராம் குன்றிமணியுடன் ஒரு ஸ்பூன் வெந்தயம் சேர்த்து பொடியுங்கள். அதை தேங்காய் எண்ணெயில் போட்டு ஒரு வாரம் ஊற வைத்து வடிகட்டுங்கள். தினமும் அதை தலைக்கு தடவி வந்தால் முடி உதிராது.
பத்து சீத்தாப்பழ இலைகளை கொதிக்கும் வெந்நீரில் போட்டு வைத்து, மறுநாள் காலை அந்த தண்ணீரைக் குடித்து வர, சர்க்கரை கட்டுக்குள் வரும்.
பச்சை குடைமிளகாய் சில நேரம் காரமாக இருக்கும். அந்த காரத்தை போக்குவதற்கு, விதைகளை நீக்கிவிட வேண்டும். பிறகு, அதை சாம்பாரில் போடவோ, கறியாக வதக்கவோ செய்யலாம். புளிச்சாறு அல்லது மோரில் ஊறவைத்து சமைத்தாலும், காரம் தணிந்து விடும்.
சமையலுக்கு உபயோகிக்கும் பெருங்காயத்தை, முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைத்து, மறுநாள் அந்த நீரை உபயோகித்தால், மணம் சீராக அமையும். பெருங்காயமும் குறைவாக செலவாகும்.
சின்ன வயசிலேயே ஒரு முடி நரைத்து விட்டாலும் அது இளநரைக்கு அறிகுறிதான். கருவேப்பிலைதான் அதுக்கு மருந்து. கருவேப்பிலையை அரைத்து வடை போல் தட்டி காய வையுங்கள். பின்னர் அதை தேங்காய் எண்ணெயில் போட்டு கொஞ்சம் சூடுபடுத்துங்கள். அதில் ஒரு ஸ்பூன் பச்சை கற்பூரம் போடுங்கள். அந்த எண்ணெய்யை தினமும் தலைக்கு தேய்த்து வந்தால் இளநரை வராது.
காய்கறிகளை நறுக்கிய உடனேயே அவற்றை சமைக்க வேண்டும். அப்படி சமைக்காமல், வெகுநேரம் வைத்திருந்தால், காற்று பட்டு, அவற்றில் உள்ள அனைத்து சத்துக்களும் போய்விடும். சத்துக்கள் போன காய்கறிகளை உண்பதால் எந்த பலனும் இல்லை. எனவே, நறுக்கிய உடனே சமைத்துவிட வேண்டும்.
சின்ன துண்டு இஞ்சியை அரைத்து ஒரு டம்ளர் வெந்நீரில் கலக்கி அரை மணி நேரம் கழித்து, தண்ணீரை வடிகட்டுகள். அதில் அரை ஸ்பூன் எலுமிச்சம் சாறு, ஒரு ஸ்பூன் தேன் கலந்து தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள். இதயக்கோளாறு வரவே வராது.
கண்களை ஒரு நாளைக்கு இரு வேளை சுத்தம் செய்ய வேண்டும். கண்ணாடி அணியாமல் பைக்கில் செல்வோர் வீட்டுக்குள் வந்ததும் கண்ணை கழுவ வேண்டும். கண்ணை திறந்து பல முறை தண்ணீரை அடித்து கழுவினால் தூசி நீங்கி விடும். காய்ச்சிய பாலில் நுங்குகளை நறுக்கிப் போட்டு தேவையான அளவு சர்க்கரை சேர்த்து ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிட சோர்வு நீங்கும்.
சீத்தாப்பழ விதைப்பொடியை மட்டும் தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் முடி உதிராது.
துளசி இலையை தேள் கொட்டிய இடத்தில் தேய்த்தால் விஷம் நீங்கும்.