பவர் கட்; முதுகில் தட்டிய ரஜினிகாந்த்: ரம்பா பேட்டி வைரல்!
நடிகை ரம்பா யூ-ட்யூப் (youtube) சேனல் ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அந்த பேட்டியில் அருணாச்சலம் திரைப்படம் குறித்தும் சில தகவல்களை அவர் தெரிவித்திருந்தார்.
அப்போது அருணாச்சலம் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் ரஜினிகாந்தை, சல்மான் கான் மற்றும் ஜாக்கி ஷரப் சந்தித்தனர். சல்மான் கான் உடன் தான் சில படங்களில் நடித்திருந்ததால் நான் சல்மான்கான் பார்த்ததும் அவரை கட்டிப்பிடித்து வணக்கம் தெரிவித்தேன்.
இதைத்தொடர்ந்து ரஜினிகாந்த் என்னிடம் குறும்பு செய்தார். தென்னிந்திய நடிகர்களுக்கு எல்லாம் இந்த வணக்கம் கிடையாதா என்றார். ஒருமுறை பவர் கட் ஆனபோது என் முதுகில் யாரோ தட்டினார்கள். பின்னர் இது ரஜினி சார் என்ன தெரிய வந்தது” என்றார்.
இந்தப் பேட்டியை ரஜினிகாந்துக்கு எதிரானவர்கள் தற்போது திசை திருப்பி வருகின்றனர். ரம்பா நடிகர் ரஜினிகாந்தை தாக்கி தான் பேசியுள்ளார் என்றும் கூறி வருகின்றனர். இந்த பேட்டி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
நடிகை ரம்பா தற்போது சினிமாவில் நடிக்கவில்லை. அவர் கணவர் மற்றும் குழந்தைகளோடு கனடாவில் செட்டில் ஆகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.