Power Pages-6: 3 வெவ்வேறு தலைவர்களின் ஆட்சியில் மத்திய அமைச்சர்: முரசொலிமாறனின் வரலாறு தெரியுமா?
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான அரிய தகவல்களை பவர் பக்கங்கள் என்ற தலைப்பில் தொடராக ஏபிபி நாடு தளத்தில் வெளிட்டு வருகிறோம்.
6வது தொடராக 35 ஆண்டுக்கு மேலாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த முரசொலி மாறன் குறித்து காண்போம்.
வி.பி. சிங், கவுடா மற்றும் வாஜ்பாய் உள்ளிட்ட 3 அரசாங்கத்திலும், மூன்று முறை மத்திய அமைச்சராக இருந்த பெருமைக்குரியவர் முரசொலி மாறன். இவரின் 35 வருடங்களுக்கு மேலான நாடாளுமன்ற பணி மற்றும் வாழ்க்கை குறித்து சுருக்கமாக தெரிந்து கொள்வோம்.
இளமைக் காலம்:
முரசொலி மாறன், 1934 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் தேதி திருக்குவளையில் பிறந்தவர். சண்முகசுந்தரம் – சண்முகசுந்தரி இணையருக்கு முதல் மகனாக பிறந்தார். இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் .
2 மகன்களின் ஒருவரான தயாநிதி மாறன் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். மற்றொருவரான கலாநிதி மாறன் திரைப்பட தயாரிப்பாளராகவும் சன் தொலைக்காட்சியின் தலைவராகவும் உள்ளார்.
இவர் தந்தை சிவன் பக்தியால் மகனுக்கு தியாகராஜசுந்தரம் என்று பெயரிட்டார். இவர் தாயாரான சண்முகசுந்தரி திமுக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் இரண்டாவது அக்கா ஆவார்.