50 வயதிலும் அதே நளினத்துடன் ஆட்டம் போட்ட பிரபுதேவா.. வீடியோ பார்த்து பிரமித்து போன ரசிகர்கள்

50 வயதிலும் அதே நளினத்துடன் ஆட்டம் போட்ட பிரபுதேவாவின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் “சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலு” என்ற திரைப்படத்தில் நடன இயக்குநர், நடிகர், இயக்குநர் அறிமுகம் கொடுத்தவர் தான் பிரபுதேவா.

இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகைகளுடன் கலக்கி தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டார்.

பிரபுதேவா கடந்த 1995ம் ஆண்டு “ரமலத் ” என்பவரை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் இருக்கிறார், அதன் பின்னர் சில கருத்து வேறுபாடு காரணமாக அந்த திருமணம் விவாகரத்தில் முடிவடைந்தது.

இந்த நிலையில், தற்போது இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு குடும்பம் குழந்தை என சந்தோசமாக வாழ்க்கை நடத்தி வருகிறார்.

மேலும், சினிமா, நடனம் என எவ்வளவு பிஸியாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அந்த வகையில், இளைஞர்களுடன் வீட்டில் ஆட்டம் போட்ட வீடியோக்காட்சியொன்றை பகிர்ந்துள்ளார்.

காணொளியை பார்த்த ரசிகர்கள், “50 வயதிலும் அதே நளினத்துடன் எப்படி ஆடுறீங்க சார்..” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *