Pran Pratishtha: குழந்தை ராமர் சிலைக்கு முதல் பூஜை செய்த பிரதமர் மோடி.. பக்தி பரவசத்தில் அயோத்தி

 யோத்தி ராமர் கோயிலில் குழந்தை ராமர் சிலையை பிரதமர் மோடி பிராண பிரதிஷ்டை செய்து வைத்தார். ராமர் கோயிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ், உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்டோர் முன்னிலையில் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி பிராண பிரதிஷ்டை செய்தார்.

 

பிராண பிரதிஷ்டை செய்யப்பட்ட குழந்தை ராமர் சிலை:

மலர்களாலும் விலை மதிப்பற்ற உபகரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட ராமர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் நேரலையில் களித்தனர்.

ஷியாமல் (கருப்பு நிறம்) கல்லில் ஐந்து வயது குழந்தை ராமர், தாமரையின் மீது நிற்பது போன்று சிலை செய்யப்பட்டுள்ளது. தாமரை மற்றும் ஒளிவட்டம் இருப்பதுபோல் செதுக்கப்பட்டுள்ள இந்த சிலையின் எடை 150 கிலோ எனக் கூறப்படுகிறது. சிலையின் மொத்த உயரம் ஏழு அடி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோயிலின் தரை தளத்தில் குழந்தை ராமர் சிலை வைக்கப்பட்டுள்ளது. கோயிலின் முதல் தளம் இன்னும் கட்டப்படவில்லை. முதலில் தளம் கட்டப்பட்ட பிறகு, ராமர், சீதை, லட்சுமணன் மற்றும் அனுமன் ஆகியோரின் சிலை அங்கு வைக்கப்பட்டுள்ளது.

திறப்பு விழாவில் பங்கேற்ற பிரபலங்கள்:

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், தொழில் அதிபர்கள் முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி, கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, அனில் கும்ப்ளே உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அயோத்தியில் குவிந்துள்ள பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், கோஷங்களை எழுப்பியும், நடனமாடியும், காவி நிற கொடிகளை அசைத்தும், பாடல்களை பாடிக்கொண்டும், இசைக்கருவிகளை வாசித்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால் சாலைகள், ரயில் நிலையங்கள் நிரம்பி வழிகின்றன.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *