Prawn Masala: காரமான செட்டிநாடு ஸ்டைல் இறால் மசாலா செய்வது எப்படி?
இறால் மசாலா என்பது காரமான மற்றும் எளிமையான இந்தியன் ஸ்டைல் மசாலா ஆகும்.
இறாலில் அதிக புரதம் உள்ளது அதே நேரம் நிறைவுற்ற கொழுப்பு குறைவாக இருக்கிறது. இதய ஆரோக்கியத்திற்கு இறாலில் உள்ள ஊட்டச்சத்துகள் அதிகம் உதவுகின்றது.
செட்டிநாடு ஸ்டைல் சமையல் நீங்கள் நினைப்பதை விட சற்று எளிதானது. எனவே இறால் வைத்து எப்படி செட்டிநாடு ஸ்டைல் இறால் மசாலா செய்யலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
தேவையான பொருட்கள்
இறால்
வெங்காயம்
தக்காளி
இஞ்சி பூண்டு விழுது
சோம்பு
பட்டை
தயிர்
மஞ்சள் தூள்
மிளகாய் தூள்
உப்பு
கறிவேப்பிலை
கொத்தமல்லி
செய்முறை
முதலில் இறாலை தோல் நீக்கி சுத்தம் செய்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, சோம்பு மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து அனைத்தையும் கலந்து வதக்க வைக்கவும்.
தேவையன அளவு உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி அனைத்தையும் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
தக்காளி கண்ணிற்கு தெரியாதளவிற்கு வேக வைக்க வேண்டும். பின் தயிரை சேர்த்து கிளறவும்.
இறுதியாக சுத்தம் செய்து வைத்த இறாலை சேர்த்து அதனுடன் கொத்தமல்லி இலைகள் சேர்த்து ஐந்து முதல் ஆறு நிமிடங்களில் வேக வைத்து எடுக்கவும்.