ஜனாதிபதி மனைவியின் 2,200 டொலர் கைப்பை: ஆட்சியை இழக்கவிருக்கும் ஒரு நாட்டின் ஆளும் கட்சி

தென் கொரியாவில் ஜனாதிபதியின் மனைவி அன்பளிப்பாக பெற்றுக்கொண்ட ஆடம்பரக் கைப்பை ஒன்று தற்போது ஆளும் கட்சியின் ஆட்சிக்கு வேட்டு வைக்கும் நிலையை உருவாக்கியுள்ளது.
Dior கைப்பை
தென் கொரிய ஜனாதிபதியின் மனைவி Kim Keon Hee கடந்த ஆண்டு மத போதகர் ஒருவரிடம் இருந்து சுமார் 2,200 டொலர் மதிப்பிலான Dior கைப்பை ஒன்றை அன்பளிப்பாக பெற்றுள்ளார்.
குறித்த சம்பவமானது ஸ்பை கமெரா காட்சிகளாக வெளியாகின. இந்த விவகாரம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், எதிர்வரும் ஏப்ரல் மாத தேர்தலில் ஜனாதிபதி Yoon Suk Yeol என்பவரின் கட்சி பெரும் பின்னடைவை சந்திக்கலாம் என்று சில அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி Yoon Suk Yeol விளக்கமளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை பயன்படுத்தி அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
ஜனாதிபதியின் மனைவிக்கு கைப்பை பரிசளித்த மத போதகரே, தமது கைக்கடிகாரத்தில் கமெரா பொருத்தி, தொடர்புடைய காட்சிகளை பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆட்சிக்கு வேட்டு வைக்கும்
கைப்பை விவகாரம் கடந்த 2022 செப்டம்பர் மாதம் நடந்துள்ளது. மட்டுமின்றி, ஜனாதிபதியின் மனைவி கிம் அந்த கைப்பையை கைப்பற்றியதாகவும் உறுதியான தகவல் இல்லை. ஆனால் அந்த அன்பளிப்பானது அரசாங்க சொத்தாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.