15 நாட்களில் அழகான அடர்த்தியான முடியை பெற.. கருவேப்பிலையில் சிம்பிள் டிப்ஸ்.!
நமக்கு எளிதாக கிடைக்கக்கூடிய விஷயம் என்பதால் பலருக்கும் கருவேப்பிலையின் அருமை தெரிவதில்லை. கருவேப்பிலை ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது.
இதில் இருக்கும், ஃபிளாவனாய்டு உணவில் உள்ள ஸ்டார்ச்சை குளுக்கோஸாக மாற்றுகின்றது.
இதன் காரணமாக இது ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை சமநிலையில் வைத்துக் கொள்கிறது. இயற்கையாகவே கருவேப்பிலையில் இன்சுலின் உற்பத்தியை ஏற்படுத்தக்கூடிய காரணிகள் இருக்கின்றன. அதோடு மட்டுமல்லாமல் இது உடலில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது. இதில் நல்ல கொழுப்புகள் இருப்பதால் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த கூடும்.
அடிக்கடி மாறும் பருவநிலை மற்றும் வைரஸ் தாக்குதல்களில் இருந்து காக்க கருவேப்பிலை உதவுகிறது. இருமல், சளி மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களுக்கு இது ஒரு நிவாரணியாக இருக்கிறது. கருவேப்பிலையில் விட்டமின் ஏ மற்றும் விட்டமின் சி அதிகமாக இருக்கிறது.
எனவே இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் உடலில் ரத்தசோகை ஏற்படுவதை தவிர்க்கும். இரும்பு சத்தை உடல் அதிக அளவு உறிஞ்ச கருவேப்பிலை உதவுகிறது. எனவே ரத்த சோகை இருப்பவர்களுக்கு கருவேப்பிலை ஒரு சிறந்த உணவாகும். இளம் வயதிலேயே பலருக்கு நரை முடி ஏற்படுகிறது. இதை கருவேப்பிலை தடுக்கிறது. ஷாம்பூ மற்றும் கண்டிஷனர் உள்ளிட்டவற்றை தலைக்கு பயன்படுத்தும் போது முடியின் உறுதித் தன்மை பாதிக்கப்படுகிறது.