அபுதாபியில் கட்டப்பட்டுள்ள முதல் இந்து கோயிலை திறந்து வைத்தார் பிரதமர் மோடி..!

முஸ்லிம் நாடுகளின் ஒன்றான ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏராளமான இந்தியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலோனோர் இந்துக்கள் ஆவர். இவர்களுக்காக அந்நாட்டு அரசாங்கம் பல நகரங்களில் இந்து கோயில்களை கட்டி இருக்கிறது. இந்த சூழலில் தான், அபுதாபியில் 27 ஏக்கர் பரப்பளவில் மிக பிரம்மாண்டமான இந்து கோயிலை அந்நாட்டு அரசாங்கம் கட்டியுள்ளது.
அல் முரக்கா பகுதியில் பிஏபிஎஸ் அமைப்பின் சார்பில் ரூ.700 கோடி மதிப்பில் இந்த நாராயணன் சுவாமி கோயில் கட்டப்பட்டு இருக்கிறது.அயோத்தி ராமர் கோயிலை போலவே இந்த கோயில் கட்டுமானத்திற்கும் ஒரு பொட்டு இரும்பை கூட பயன்படுத்தவில்லை.
இந்நிலையில், இந்தக் கோயிலை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். பின்னர் அங்கு பல பூஜைகளையும் மோடி மேற்கொண்டார். இதன் தொடர்ச்சியாக, அந்தக் கோயிலின் வாசலில் உள்ள கல்வெட்டில் சுத்தியலையும், உளியையும் எடுத்து ‘Vasudhaiva kutumbakam’ (வசுதைவ குடும்பகம்) என்று பொறித்தார். வசுதவை குடும்பகம் என்பதற்கு சமஸ்கிருத மொழியில் உலகமே ஒரே குடும்பம் என்பது பொருள் ஆகும்.