அடுத்த மாதம் சென்னை வருகிறார் பிரதமர் மோடி..! தேதி அறிவிப்பு..!

அண்ணாமலையின் பிப்ரவரி 27ல் திருப்பூரில் நடைபெறும் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அந்த வகையில், தமிழகத்துக்கு இந்த ஆண்டு 2-வது முறையாக பிப்.27-ம் தேதி மோடி வருகிறார். 2 நாட்கள் தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். 27-ம் தேதி பல்லடத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று மோடி பேசுகிறார்.
இந்த பொதுக் கூட்டத்துக்கு பிறகு தமிழகத்தின் முக்கிய தலைவர்களை மோடி சந்திக்கிறார். அந்த சந்திப்புக்கு பிறகே மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி இறுதி வடிவம் பெறலாம். இதனை தொடர்ந்து கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய பாஜக தேசிய தலைவர்கள் மார்ச் மாதம் சென்னைக்கு வர இருக்கின்றனர்.
இந்த சூழலில் பிரதமர் மோடி சென்னைக்கு மார்ச் 4-ம் தேதி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசு மற்றும் கட்சி நிகழ்வுகளில் மோடி பங்கேற்பார் என்றும், சென்னையில் பாஜக பொதுக்கூட்டத்தில் மோடி பங்கேற்பார் என்றும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.