3 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி..!
பிரதமர் மோடி, மூன்று நாள் சுற்றுப்பயணமாக வரும் 15ம் தேதி தமிழகம் வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அப்போது, சேலம் மற்றும் கன்னியாகுமரி பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதாகவும் கூறப்படுகிறது. சேலத்தை ஒட்டியுள்ள 4 மக்களவை தொகுதிகளுக்கு தேர்தல் பரப்புரை மேற்கொள்ளும் வகையில் அந்த பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதன் பின்னர் மார்ச் 16ம் தேதி கன்னியாகுமரியில் நடைபெறும் பொதுகூட்டத்தில் கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட மக்களவை தொகுதிகளுக்கு பரப்புரை மேற்கொள்கிறார். இதற்கடுத்த நாள் கோவையில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க இருக்கிறார் என கூறப்படுகிறது.
அதன்படி, மார்ச் 15-ம் தேதி சேலத்துக்கு வரும் பிரதமர், அங்கு நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். சேலத்தை ஒட்டியுள்ள 4 மக்களவை தொகுதிகளுக்கு பரப்புரை மேற்கொள்ளும் வகையில் அந்த பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
இதன்பின் மார்ச் 16-ம் தேதி கன்னியாகுமரியில் நடைபெறும் பொதுகூட்டத்தில் கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட மக்களவை தொகுதிகளுக்கு பரப்புரை மேற்கொள்கிறார்.
இதற்கடுத்த நாள் கோவையில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
வரும் 22 ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருவார் என சொல்லப்பட்டிருந்த நிலையில் முன்கூட்டியே திட்டமிடப்பட்டுள்ள இந்த பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. முன்னதாக, திருப்பூர், திருநெல்வேலி மற்றும் சென்னை ஆகிய பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி கலந்து கொண்ட கூட்டங்களில், கூட்டணி கட்சித் தலைவர்கள் பலரும் கலந்து கொள்வார்கள் என சொல்லப்பட்டிருந்த நிலையில் ஒரு சிலர் மட்டுமே கலந்து கொண்டிருந்தனர்.