வரும் 19ஆம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!
பிரதமர் மோடி வரும் 19ஆம் தேதி தமிழகம் வர இருக்கிறார். அப்போது தமிழ்நாட்டில் நடைபெறும் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளைத் தொடங்கி வைக்க இருக்கிறார்.
கேலோ இந்தியா இந்தியா என்ற பெயரில் நாடு முழுவதும் இருந்து அனைத்து மாநிலங்களும் கலந்துகொள்ளும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்தப் போட்டிகள் தமிழகத்தில் வரும் ஜனவரி 19 முதல் 31 வரை நடக்க உள்ளன. சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய நகரங்களில் இந்தப் போட்டிகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த விளையாட்டுப் போட்டிகளில் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் செய்துள்ளது.
கடந்த 4ஆம் தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெல்லி சென்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்தார். அப்போது தமிழ்நாட்டில் நடக்கும் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிக்கான அழைப்பிதழைக் கொடுத்து வரவேற்றார். விளையாட்டுப் போட்டிகளை பிரதமர் வந்து தொடங்கி வைக்கவும் வேண்டுகோள் விடுத்தார்.
அதன்படி, இரண்டு நாள் பயணமாக தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் மோடி 19ஆம் தேதி கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.