வரும் 18, 19ம் தேதிக்கு பிறகும் பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளார் : அண்ணாமலை..!
தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை சென்னையில் அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிக்கும் கூட்டணி கட்சிகள் வேட்பாளர்களை முடிவு செய்யும் போது, விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கும் முடிவு செய்து அறிவிப்போம். கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடந்த ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் தலைமையில் குழு உள்ளது. அந்த குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. விரைவில் கூட்டணி குறித்து அறிவிப்போம்.
பிரதமர் மோடி வருகிற 18ம் தேதி கோவை வருகிறார். தொடர்ந்து 19ம் தேதி சேலம் வர உள்ளார். அதன் பிறகும் பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளார். வராமல் இருக்க போறதும் இல்லை. அதனால் சரியான நேரத்தில் எல்லா கூட்டணி கட்சி தலைவர்களையும் மேடைக்கு கொண்டு வருவோம். தமிழகத்தில் படித்தவர்கள் அரசியலுக்கு வர பயப்படுகிறார்கள். தமிழகத்தில் பணம், பரிசு பொருள் கொடுப்பது அதிகமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.