பூடான் புறப்பட்டார் பிரதமர் மோடி..!
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான பூட்டான் மிக முக்கியமான எல்லை நாடு. சீனாவுடன் எல்லையை பகிர்ந்துள்ள நாடு பூட்டான். இந்த நாட்டின் மீதான இந்தியாவின் மேலாதிக்கத்தை சீனா ஒருபோதும் விரும்பியது இல்லை.
இந்தியா- சீனா- பூட்டான் நாடுகள் சந்திக்கும் டோக்லாம் பீடபூமியை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்பது சீனாவின் நோக்கம்.
டோக்லாம் பீடபூமி என்பது இந்தியாவின் இதர நிலப்பகுதிகளை இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுடன் இணைக்கக் கூடிய முக்கியமான பகுதி. இதனால் இதற்கு கோழி கழுத்துப் பகுதி- சிக்கன் நெக் என்ற பெயரும் உண்டு. இதனால்தான் டோக்லாம் பீடபூமி மீது சீனா அதீத கவனம் செலுத்தி வருகிறது.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 21ம் தேதி அன்று பூடானுக்கு 2 நாள் அரசுமுறை பயணம் மேற்கொள்வார் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.ஆனால், மோசமான வானிலை காரணமாக பிரதமரின் பூட்டான் பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், பிரதமர் மோடி 2 நாள் அரசு முறை பயணமாக இன்று காலை பூடான் புறப்பட்டார். பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு பூடானில் உள்ள பரோ சர்வதேச விமான நிலையத்தில் பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தப் பயணத்தின்போது, பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியேல் வாங்சுக் மற்றும் பூடானின் நான்காவது மன்னர் ஜிக்மே சிங்கே வாங்சுக் ஆகியோரை பிரதமர் மோடி சந்திக்கிறார் . பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கேவுடனும் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
#WATCH | Delhi: Prime Minister Narendra Modi departed for Bhutan this morning.
The Prime Minister will be on a state visit to Bhutan on March 22-23. pic.twitter.com/RMwI9CiJtN
— ANI (@ANI) March 22, 2024