இன்று அபுதாபி இந்து கோவிலை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி..!
பிரதமர் மோடி 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று ஐக்கிய அரபு அமீரகம் சென்றார். அங்கு சென்ற பிரதமர் மோடியை ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் வரவேற்றார். இதனைதொடர்ந்து பிரதமருக்கு ராணுவ மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து பிரதமர் மோடி அபுதாபியில் ‘அஹ்லன்’ மோடி என்ற தலைப்பில் நடைபெறும் பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சியில் இந்திய சமூகத்தினரை நேற்ரு சந்தித்தார். இந்த நிகழ்ச்சியில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்னர்.
அபுதாபி ஜாயித் ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில் நடைபெறும் இந்த பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சியில் 700 நடனக்கலைஞர்கள் பங்கேற்றனர். கலை நிகழ்ச்சிகளை பிரதமர் மோடி பார்த்தார். தொடர்ந்து மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட மேடையில் பிரதமர் மோடி இந்திய மக்களிடையே உரையாற்றினார். பிறகு நேற்றைய நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு பிரதமர் மோடி இன்று துபாய்-அபுதாபி ஷேக் ஜாயித் சாலையில் உள்ள அல் முரக்கா பகுதியில் கட்டப்பட்டுள்ள இந்து கோவிலை திறந்து வைக்கிறார்.
கடந்த 2015-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி, ஐக்கிய அரபு அமீரகம் சென்றார். அப்போது, அபுதாபியில் 27 ஏக்கர் நிலத்தில் சுவாமி நாராயண் கோயில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். இந்தக் கோயில் ராஜஸ்தான் இளஞ்சிவப்பு மணற்கல் மற்றும் இத்தாலி வெள்ளை மார்பிள் கற்களால் வடிவமைக்கப்பட்டது. இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 900 கோடி ரூபாய் மதிப்பில் மொத்தம் 7 கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இவை, நிலநடுக்கம், மற்றும் அதிக வெப்பத்தால் பாதிக்காத வகையில் அதிநவீன தொழில்நுட்பம் பயன்பத்தப்பட்டு உள்ளது. மேலும், இந்த கோயில் பாப்ஸ் அமைப்பு சார்பில் கட்டப்பட்டுள்ளது இந்நிலையில், இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி, நேற்று ஐக்கிய அரபு அமீரகம் சென்றார். இந்த பயணத்தின் போது அபுதாபியில் கட்டப்பட்டுள்ள முதல் இந்து கோயிலான சுவாமி நாராயண் கோயிலை இன்று திறந்து வைக்கிறார்.மேலும், இந்த பயணத்தின் போது ஐக்கிய அரபு அமீரக இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானையும் சந்திக்கவுள்ளார்.