நாளை தமிழகத்தில் உள்ள 34 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல்..!

முக்கிய நகரங்களில் உள்ள ரயில் நிலையங்கள் எதிா்கால வளா்ச்சியை கருத்தில் கொண்டு அம்ருத் பாரத் ரயில் நிலையம் திட்டத்தின் கீழ் மேம்பத்தப்படுகின்றன. இந்தத் திட்டத்தின் கீழ் ரயில் நிலையங்களின் சுற்றுப்புற பகுதிகளை தூய்மையாக பராமரிப்பது, இலவச வைபை வசதி, காத்திருப்பு அறை, மின்தூக்கி, மின்படிகட்டு, உள்ளூா் தயாரிப்பை முன்னிலைபடுத்தும் ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு அமைப்பது உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட உள்ளன.

நாடு முழுவதும் உள்ள 1,318 ரயில் நிலையங்கள் இந்தத் திட்டத்தின் கீழ் மேம்படுத்த தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக கடந்த ஆண்டில் 508 ரயில் நிலையங்களை மேம்படுத்துவதற்கான பணிகளை பிரதமா் மோடி தொடங்கி வைத்தாா்.

இந்த நிலையில், 2-ம் கட்டமாக நாடு முழுவதும் 554 ரயில் நிலையங்களை உலக தரத்தில் மேம்படுத்துவதற்கான பணிகளை பிரதமா் மோடி நாளை (26-ம் தேதி) தொடங்கி வைக்க உள்ளாா். இது குறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

நாட்டின் முக்கிய ரயில் நிலையங்கள் அம்ருத் பாரத் ரயில் நிலையம் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட உள்ளன. இதில் தமிழகத்தின் சென்னை கோட்டத்தில் 7 ரயில் நிலையங்கள், சேலம் கோட்டத்தில் 8 ரயில் நிலையங்கள், திருச்சி கோட்டத்தில் 4 ரயில் நிலையங்கள், மதுரை கோட்டத்தில் 13 ரயில் நிலையங்கள், கேரளத்தின் பாலக்காடு கோட்டத்தில் 9 ரயில் நிலையங்கள், திருவனந்தபுரம் கோட்டத்தில் 3 ரயில் நிலையங்களும் மேம்படுத்தப்பட உள்ளன.

தமிழகத்தில் தெற்கு ரெயில்வே சாா்பில் 32 ரயில் நிலையங்கள், தென் மேற்கு ரயில்வே சாா்பில் தருமபுரி, ஓசூா் ஆகிய இரு ரயில் நிலையங்கள் என 34 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. இதில் திருநெல்வேலி ரயில் நிலையம் ரூ.270 கோடியிலும், கும்பகோணம் ரயில் நிலையம் ரூ.118 கோடியிலும், திருச்சூா் ரயில் நிலையம் ரூ.384.81 கோடியிலும், செங்கனூா் ரயில் நிலையம் ரூ.205 கோடியிலும் ஒரே கட்டமாக மேம்படுத்தப்படவுள்ளன.

மற்ற ரயில் நிலையங்களை பல்வேறு கட்டங்களாக மேம்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளன. இந்தப் பணிகள் தொடங்கி இரு ஆண்டுகளுக்குள் முடிக்க திட்ட மிடப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *