இன்று உ.பி.யில் பிரச்சாரத்தை துவக்குகிறார் பிரதமர் மோடி..!
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயிலில் பால ராமர் சிலை பிரதிஷ்டை விழா திங்கள்கிழமை (ஜன.22) கோலாகலமாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மாநிலத்தில் உள்ள புலந்த்சாஹரில் இன்று பா.ஜ.க.வின் பேரணிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இப்பேரணி பா.ஜ.க.வின் மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தின் தொடக்கமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதற்காக, உத்தரப் பிரதேசத்தின் மேற்கு பிராந்திய நகரத்தில் கட்சித் தொடண்டர்கள், தலைவர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
உத்தரப் பிரதேசத்தின் மேற்கு பிராந்தியத்தில் உள்ள 14 தொகுதிகளில் பா.ஜ.க. கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 8 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. அதே வெற்றியை 2024 தேர்தலிலும் பெற உழைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இன்று பிரதமர் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க இருக்கும் பேரணியில் சுமார் 5 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று பா.ஜ.க. தெரிவித்துள்ளது.