அண்ணியை சந்திக்க முயற்சி செய்யும் இளவரசர் ஹரி: ஆனால்
பிரித்தானிய இளவரசரும் வருங்கால மன்னருமான வில்லியமுடைய மனைவி கேட்டுக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, வில்லியமுடைய தம்பியான இளவரசர் ஹரி அவரை சந்திக்க முயற்சி மேற்கொண்டுவருவதாக கூறப்படுகிறது.
புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகியுள்ள இளவரசி கேட்
பிரித்தானிய இளவரசி கேட்டுக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ள நிலையில், உலகம் முழுவதிலுமிருந்து அவருக்கு ஆதரவாக குரல்கள் ஒலிக்கத் துவங்கியுள்ளன. உலகத் தலைவர்கள், பிரபலங்கள் முதல், சாதாரண மக்கள் வரை சமூக ஊடகங்களில் இளவரசி கேட்டுக்கு ஆறுதலளிக்கும் செய்திகளை வெளியிட்டுவருகின்றனர்.
அண்ணனை சந்திக்க முயற்சி செய்யும் இளவரசர் ஹரி
இந்நிலையில், இளவரசி கேட்டுக்கு புற்றுநோய் என செய்தி வெளியானதைத் தொடர்ந்து, இளவரசர் வில்லியமுடைய தம்பியான இளவரசர் ஹரி, தன் அண்ணனையும் அண்ணி கேட்டையும் சந்திக்க முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.
மே மாதம் ஹரி பிரித்தானியா வர திட்டமிட்டுள்ளதாகவும், அப்போது அவர் இளவரசர் வில்லியமையும் அண்ணி கேட்டையும் சந்திக்க முயற்சி செய்வார் என்றும் ராஜ குடும்ப நிபுணரான Tom Quinn என்பவர் தெரிவித்துள்ளார்.
ஆனால்…
ஆனால், அப்படி ஒரு சந்திப்பு நிகழ்ந்தாலும், அது முன்னமே, கவனமாக ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு சந்திப்பாகவே இருக்கும் என்றும், அது மிகக்குறைவான நேரமே நீடிக்கும் என்றும் கூறும் Tom Quinn, சகோதரர்களுக்கிடையில் கடினமான உரையாடல்கள் எதுவும் நிகழ்ந்துவிடாமல் தவிர்ப்பதற்காகவே இப்படி ஒரு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்